நம்ம அனுஷ்காவா இது, நம் கண்ணையே நம்ப முடியலையே: வியக்கும் ரசிகர்கள்
Recommended Video

சென்னை: உடல் எடையை குறைக்க வெளிநாட்டிற்கு சென்ற அனுஷ்கா ஒல்லியாகியது தான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக அனுஷ்கா தனது உடல் எடையை கூட்டினார். அதன் பிறகு உடல் எடையை குறைக்க ஜிம்மில் ஒர்க் அவுட் செய்தார், யோகா செய்தார், உணவுக் கட்டுப்பாட்டில் இருந்தார். ஒன்றும் பலன் அளிக்கவில்லை.
அமெரிக்காவுக்கு சென்று உடல் எடையை குறைக்க சிகிச்சை எடுத்தும் புண்ணியம் இல்லை.

அனுஷ்கா
அனுஷ்கா பட்ட கஷ்டங்களை பார்த்த தோழி ஒருவர் அவரை ஆஸ்திரியாவுக்கு செல்லுமாறு கூறினார். இதையடுத்து ஆஸ்திரியா சென்ற அனுஷ்கா தனது உடல் எடையை இயற்கை முறைகள் மூலம் வெகுவாக குறைத்துள்ளார்.

சமூக வலைதளங்கள்
அனுஷ்கா ஒல்லியாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நம்ம அனுஷ்காவா இது, நம்பவே முடியவில்லை என்று தான் அனைவரும் கூறி வியக்கிறார்கள்.

கிண்டல்
அனுஷ்கா குண்டாக இருந்ததால் கேலி, கிண்டல்களுக்கு ஆளானார். கடைசி முயற்சியாக ஆஸ்திரியா சென்றவருக்கு நல்லது நடந்துள்ளது. ஒல்லியானது மட்டும் அல்ல கூடுதல் அழகாகவும் இருக்கிறார் அனுஷ்கா.

சைலன்ஸ்
அனுஷ்கா, மாதவனுடன் சேர்ந்து சைலன்ஸ் என்ற படத்தில் நடிக்கிறார். ஹேமந்த் மதுகர் இயக்கும் இந்த படத்தில் அனுஷ்காவை வித்தியாசமாக காட்டுவார்களாம். இது அனுஷ்காவின் கெரியரில் முக்கியமான படமாக அமையும் என்கிறார் தயாரிப்பாளர் கோனா வெங்கட்.


Click it and Unblock the Notifications











