»   »  சிவாஜிக்கு போட்டின்னா சாவித்ரி, விக்ரமுக்கு அனுஷ்கா!

சிவாஜிக்கு போட்டின்னா சாவித்ரி, விக்ரமுக்கு அனுஷ்கா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ், தெலுங்கில் எடுக்கப்படும் பாக்மதி படத்திற்காக அனுஷ்கா ஜிம்முக்கு சென்று மாங்கு, மாங்குன்னு ஒர்க்அவுட் செய்து தனது உடல் எடையை 18 கிலோ குறைத்துள்ளாராம்.

படத்திற்காக உடல் எடையை கூட்டி, குறைப்பது என்றால் நம் அனைவரின் நினைவுக்கு வரும் முதல் ஆள் சீயான் விக்ரம் தான். தற்போது அவருக்கு அடுத்தபடியாக உள்ளார் அனுஷ்கா.

இஞ்சி இடுப்பழகி படத்திற்காக கண்டமேனிக்கு சாப்பிட்டு உடல் எடையை கூட்டினார் அனுஷ்கா. இந்நிலையில் அசோக் இயக்கத்தில் அவர் பாக்மதி படத்தில் நடிக்கிறார்.

Anushka loses 18 kg for Bhagmati

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள அந்த படத்திற்காக அனுஷ்கா உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கடுமையான டயட், யோகா, ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து அனுஷ்கா தனது எடையை இதுவரை 18 கிலோ குறைத்துள்ளார். தமிழ், தெலுங்கில் எடுக்கப்படும் பாக்மதி ஒரு த்ரில்லர் படமாம்.

கோலிவுட் ரசிகர்களுக்கு தான் த்ரில்லர் படம் என்றால் மிகவும் பிடிக்குதே. அப்படி என்றால் பாக்மதி நிச்சயம் ஹிட் தான்.

Read more about: anushka, weight, அனுஷ்கா
English summary
Anushka has lost 18 kgs so far for her upcoming bilingual movie Bhagmati.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil