»   »  கல்யாண தோஷம் நீங்க மூகாம்பிகைக் கோயிலில் அனுஷ்கா சிறப்பு பூஜை

கல்யாண தோஷம் நீங்க மூகாம்பிகைக் கோயிலில் அனுஷ்கா சிறப்பு பூஜை

Posted By:
Subscribe to Oneindia Tamil

தென்னிந்திய சினிமாவில் திருமணம் தாமதமாகிக் கொண்டிருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா.

பாகுபலி 2 வெளியாவதற்கு முன்பு வரை அனுஷ்கா குண்டடித்துவிட்டார் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள், அந்தப் படம் வந்த பிறகு அனுஷ்கா போல பேரழகி யாருமில்லை என 'ஜொள்ளி' வருகின்றனர்.

2005-ல் நடிக்க வந்தார் அனுஷ்கா. 12 ஆண்டுகள் ஆகிவிட்டன நடிக்க வந்து. என்னதான் நடிப்பின் உச்சத்தில் இருந்தாலும் காலா காலத்தில் கல்யாணம் நடந்தால்தானே மரியாதை என அனுஷ்கா குடும்பம் நினைக்கிறது. அம்மணியும் ஓகே சொல்லிவிட்டார் என்றாலும், இன்னும் பொருத்தமான வரன் அமையவில்லை.

தோஷம்

தோஷம்

காரணம் அனுஷ்காவுக்கு ஜாதகத்தில் தோஷம் இருப்பதாக ஜோதிடர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து திருமண தடை நீங்க, அனுஷ்கா கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் சிறப்பு பூஜை செய்துள்ளார்.

ரகசிய வருகை.. மக்களுடன் க்யூவில்

ரகசிய வருகை.. மக்களுடன் க்யூவில்


இந்த கோவிலுக்கு அனுஷ்கா வருவதை ரகசியமாக வைத்து இருந்தனர். சிறப்பு வழியில் செல்லாமல் கையில் பூஜை பொருட்கள் அடங்கிய தட்டுடன் பக்தர்கள் கூட்டத்தோடு அவர் வரிசையில் நின்றார்.

பூஜை

பூஜை

முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு வசதி எதையும் அவர் கேட்கவில்லை. அனுஷ்காவுடன் தாயார் மற்றும் சகோதரர் சென்றிருந்தனர். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். திருமண தடை நீங்குவதற்காக இந்த பூஜை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தந்தை பேட்டி

தந்தை பேட்டி

பின்னர் மங்களூரில் உள்ள துர்கா பரமேஸ்வரி கோவிலுக்கு சென்றும் திருமண தடை நீங்க பூஜை செய்தார். ஆனால் இந்த பூஜை திருமணத் தடை நீங்க அல்ல என்று மறுத்த அனுஷ்காவின் தந்தை, "லிங்கா படத்தில் அனுஷ்கா நடித்துக்கொண்டு இருந்தபோது கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபட்டார். தற்போது அவர் நடித்துள்ள பாகுபலி-2 படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருப்பதால் மீண்டும் அந்த கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்," என்றார்.

English summary
Sources say that Actress Anushka has performed special pooja at Kollur Mukambika Temple for her marriage.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil