»   »  உடம்புக்கு எ. சாறு, தலைக்கு தே, க, வி. எண்ணெய்: அனுஷ்கா அழகின் ரகசியம்

உடம்புக்கு எ. சாறு, தலைக்கு தே, க, வி. எண்ணெய்: அனுஷ்கா அழகின் ரகசியம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: அனுஷ்கா தனது அழகின் ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.

கோலிவுட் மற்றும் டோலிவுட்டின் முன்னணி ஹீரோயினாக உள்ளார் அனுஷ்கா. அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

35 வயதானாலும் அவர் அழகாக உள்ளார். இந்நிலையில் அவர் தனது அழகின் ரகசியத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

அழகு

அழகு

உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் தான் என் அழகின் ரகசியம். தினமும் 6 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் தேகத்தை பளபளப்புடன் வைத்துக்கொள்ள முடியும்.

எலுமிச்சை

எலுமிச்சை

அழகுசாதன பொருட்களை பயன்படுத்தாமல் எலுமிச்சை சாற்றை உடம்பில் பூசிக் கொள்ளலாம். தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், விளக்கெண்ணெய்யை பூசிக் கொள்ளலாம்.

யோகா

யோகா

நான் தினமும் 30 நிமிடங்கள் யோகா செய்கிறேன். நிறைய பழங்கள் சாப்பிடுவேன். உணவில் காய்கறிகளை அதிக அளவில் சேர்ப்பேன். எண்ணெய் பலகாரங்களை தொட்டுக்கூட பார்க்க மாட்டேன்.

இரவு உணவு

இரவு உணவு

இரவு நேர உணவை தூங்குவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்பு சாப்பிட வேண்டும். சாப்பிட்ட உடன் தூங்கினால் உடல்நலம் பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார் அனுஷ்கா.

English summary
Actress Anushka has revealed the secret of her beauty. Anushka's parents want her to marry some one and settle down soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil