»   »  அனுஷ்காவுக்கு மட்டும் எப்படி தொடர்ந்து ஹிட் படங்களாக அமையுது?: இது தான் அந்த ரகசியம்

அனுஷ்காவுக்கு மட்டும் எப்படி தொடர்ந்து ஹிட் படங்களாக அமையுது?: இது தான் அந்த ரகசியம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதன் ரகசியம் குறித்து அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் வெற்றி நாயகியாக உள்ளார். அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. இந்நிலையில் தான் தனது வெற்றியின் ரகசியத்தை வெளியிட்டுள்ளார் அனுஷ்கா.

இது குறித்து அவர் கூறுகையில்,

ஹீரோ

ஹீரோ

சினிமாவை பொறுத்த வரை கதை தான் ஹீரோவே தவிர நடிகர், நடிகைகள் கிடையாது. நல்ல கதையாக உள்ளதா என்று ரசிகர்கள் பார்க்கிறார்கள். அவர்கள் நடிகர்களை பார்ப்பது இல்லை.

கதாபாத்திரங்கள்

கதாபாத்திரங்கள்

முன்பு எல்லாம் எனது கதாபாத்திரம் நன்றாக உள்ளதா என்று பார்த்தே படங்களை தேர்வு செய்தேன். அவ்வாறு நான் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்வு செய்த படங்கள் தோல்வி அடைந்தன.

கதை

கதை

தற்போது நான் என் கதாபாத்திரத்தை பார்ப்பது இல்லை. மாறாக கதை நன்றாக உள்ளதா என்றே பார்க்கிறேன். கதை பிடித்துவிட்டால் என்னுடைய கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும் அந்த படத்தில் நடித்து வருகிறேன்.

கவர வேண்டும்

கவர வேண்டும்

ஒரு கதையை கேட்ட உடன் அதை நம்மை கவர வேண்டும். அத்தகைய கதைகளையே தேர்வு செய்கிறேன். அண்மை காலமாக நல்ல கதை உள்ள படங்கள் எனக்கு கிடைக்கின்றன. அதனால் வெற்றியும் கிடைக்கின்றது.

ஹிட்

ஹிட்

நல்ல கதையை தேர்வு செய்த பிறகு அந்த படம் ஹிட்டாகுமா, தோல்வி அடையுமா என்று யோசிக்க மாட்டேன். நல்ல கதையில் நடித்த திருப்தியுடன் இருப்பேன். படம் ஹிட்டானால் அதை போனஸாக நினைத்து மகிழ்வேன்.

English summary
Actress Anushka has revealed the secret of her success in the cine industry.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil