»   »  வயசானாலும் அழகா இருக்கணுமா.. அப்படீன்னா அனுஷ்கா கிட்ட டிப்ஸ் கேளுங்க கேர்ள்ஸ்!

வயசானாலும் அழகா இருக்கணுமா.. அப்படீன்னா அனுஷ்கா கிட்ட டிப்ஸ் கேளுங்க கேர்ள்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கவலைகள் இல்லாமல் மனம் தூய்மையாக இருந்தாலே வயதானாலும் முகம் அழகாக இருக்கும் என நடிகை அனுஷ்கா தனது அழகிற்கான ரகசியமாக தெரிவித்துள்ளார்.

முப்பது வயதைத் தாண்டிய போதும் தமிழ் மற்றும் தெலுங்கில் தொடர்ந்து முன்னணி நாயகிகளுள் ஒருவராக இருந்து வருகிறார் நடிகை அனுஷ்கா. தற்போது அவர் சிங்கம் படத்தின் 3வது பாகமான எஸ்3 படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகவும், வசூலில் சாதனை படைத்த பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.

34 வயதானாலும், தொடர்ந்து இளம் வயது நாயகிகளுக்கு போட்டியாக பட வாய்ப்புகளைப் பெற்று வருகிறார் அழகான அனுஷ்கா.

இந்நிலையில் தனது அழகிற்கான காரணமாக அவர் பேட்டியொன்றில் கூறியிருப்பதாவது:-

பாராட்டு...

பாராட்டு...

நான் அழகாக இருப்பதாக ரசிகர்கள், பட உலகினர் பாராட்டுகின்றனர். ஒரு படத்தில் குண்டு பெண் வேடத்தில் நடித்தேன். அந்த பருமன் கூட அழகுதான் என்றும் கூறினர்.

அழகின் ரகசியம்...

அழகின் ரகசியம்...

நான் அழகாக இருப்பதற்கான ரகசியம் என்ன என்று பலரும் கேட்டவண்ணம் இருக்கிறார்கள். அழகு என்பது அவரவர் கையில் இருக்கிறது. சிலர் அந்த அழகை காப்பாற்றிக்கொள்கிறார்கள். வேறு சிலரோ அதை தொலைத்து விடுகிறார்கள்.

மனம் சம்பந்தப்பட்டது...

மனம் சம்பந்தப்பட்டது...

அழகு என்பது கடைகளில் கிடைக்கும் கிரீம்களை தடவுவதால் வருகிறது என்று நினைப்பவர்களும் உண்டு. அது தவறு. அழகு சருமம் சம்பந்தப்பட்டது என்று நினைத்து சருமத்தை மட்டும் மெருகேற்றினால் அழகு வராது. அது மனம் சம்பந்தப்பட்டது.

கவலைக்கு நோ...

கவலைக்கு நோ...

இரவு தூங்காமல் இருப்பது, எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டுக் கொண்டு இருப்பது, சாதாரண பிரச்சினைகளை பெரிதாக எடுத்துக்கொண்டு அதிலேயே குழம்பிப்போய் இருப்பது, போன்றவை அழகை கெடுத்து விடும்.

பாசிட்டிவ் எண்ணங்கள்...

பாசிட்டிவ் எண்ணங்கள்...

நான் எந்த பிரச்சினை வந்தாலும் வருத்தப்பட மாட்டேன். எல்லா விஷயங்களையும் ‘பாசிட்டிவ்' ஆகவே பார்ப்பேன். மனதில் என்ன கவலை இருந்தாலும் முகத்தில் தெரியும். எனவே கவலைகளை நெருங்க விடமாட்டேன்.

யோகாவும் காரணம்...

யோகாவும் காரணம்...

மனதை எப்போதும் தூய்மையாக வைத்து இருப்பேன். மனம் அழகாக இருந்தால் வெளிப்புற தோற்றமும் அழகாகும். தினமும் யோகா பயிற்சிகள் செய்கிறேன். அதுவும் எனது அழகுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.

English summary
Actress Anushka has revealed her beauty secret that her pure mind is the reason behind her beauty.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil