»   »  அனுஷ்காவுக்கு வந்த "அந்த" ஆசை!

அனுஷ்காவுக்கு வந்த "அந்த" ஆசை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ருத்ரமாதேவி படத்தில் நடிக்கப் போய் இப்போது நகை ஆசை பிடித்து ஆட்டுகிறதாம் அனுஷ்காவை.

ராஜா ராணி கதைகளுக்கு அனுஷ்கா செம பொருத்தம் என்ற பெயர் வாங்கி ரொம்ப நாட்களாகி விட்டது. இப்போதெல்லாம் மரத்தைச் சுற்றி ஓடி வந்து காதலிக்கும் படங்களை விட ராணி வேடத்திலும், போர் வீராங்கனை வேடத்திலும்தான் அதிகம் நடித்து வருகிறார் அனுஷ்கா.

பாகுபலியில் கலக்கினார். தொடர்ந்து ருத்ரமாதேவியில் அசத்தினார். இப்போது பாகுபலி 2 படத்தில் அதகளம் செய்யக் காத்திருக்கிறார். பாகுபலிக்கும், அதன் 2ம் பாகத்துக்கும் இடையே வெளியான ருத்ரமாதேவி அனுஷ்காவுக்குள் ஒரு நகை வெறியையே ஏற்படுத்தி விட்டதாம். இதுகுறித்து அனுஷ்கா கூறுவதைக் கேளுங்கள்...

காது கழுத்தில் எதுவுமே இருக்காது

காது கழுத்தில் எதுவுமே இருக்காது

எனக்கு நகைகள் அணிவதில் ஆர்வமே கிடையாது. காது, கழுத்தில் எதையுமே போட மாட்டேன். நகைளை அணிந்து நகைக் கடை போல நடமாடும் பெண்களை நன்றாக வேடிக்கை பார்ப்பேன்.

ஆனா இப்ப அப்படி இல்லை

ஆனா இப்ப அப்படி இல்லை

ஆனால் இப்போது அப்படி இல்லை. ருத்ரமாதேவி படத்தில் நடித்தது முதலே எனக்கும் நகை ஆசை வந்து விட்டது. நகை அணிய ஆர்வம் காட்டுகிறேன். ராணி கேரக்டருக்காக நிறைய நகை அணிந்து நடித்தது எனக்கு நகை மீது பற்றை ஏற்படுத்தி விட்டது.

ஆசை ஆசையாக

ஆசை ஆசையாக

நகைகள் என்றால் இப்போது ஆசை வந்து விட்டது. தாக்கம் ஏற்பட்டு விட்டது. நானும் நகை அணிய ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளேன்.

அது என்ன டிசைன்?

அது என்ன டிசைன்?

நகைகள் அணிந்து வரும் பெண்கள் என்ன மாதிரியான நகை அணிந்துள்ளனர், டிசைனில் போட்டுள்ளனர் என்பதை இப்போது ஆர்வமாக கவனிக்கிறேன்.

அழகுதான்

அழகுதான்

பெண்களுக்கு நகை தேவையில்லாத அலங்காரம் என்று முன்பு கருதினேன். ஆனால் இப்போது அது பெண்களுக்கு அழகுக்கு அழகு சேர்க்கிறது என்பதை அறிந்து கொண்டுள்ளேன் என்றார் அனுஷ்கா.

English summary
Actress Anushka has found her new 'love', that is nothing but jewells. She never liked jewells but now she is very interested in the yellow metal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil