»   »  பாகுபலியைத் தொடர்ந்து 'பகமதி'யாக மாறும் அனுஷ்கா

பாகுபலியைத் தொடர்ந்து 'பகமதி'யாக மாறும் அனுஷ்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலி படத்தில் ராணியாக நடித்த அனுஷ்கா, அடுத்ததாக பகமதி என்ற ஒரு சரித்திரப் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பாகுபலி மற்றும் ருத்ரமாதேவி படங்களில் கம்பீரமான ராணியாக நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்த அனுஷ்கா இயக்குனர்களின் மனதையும் கவர்ந்து விட்டார் போலும்.

இளம் தெலுங்கு இயக்குனர்களில் ஒருவரான ஜி.அசோக் அடுத்ததாக இயக்கவிருக்கும் படம் பகமதி. சரித்திரப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதையை அமைத்திருக்கும் அசோக், இதில் அனுஷ்கா தான் நடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறாராம்.

Anushka's Next Historical Movie

படத்தின் கதையைக் கேட்ட அனுஷ்காவும் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டாராம், எனினும் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாகுபலி 2 படத்தை முடித்து விட்டுதான் இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

அனுஷ்கா பாகுபலி 2 படத்தை முடித்து விட்டு 2016 ம் ஆண்டின் மத்தியில் இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார். அருந்ததி மற்றும் ருத்ரமாதேவி படங்களைப் போல இந்தப் படமும் அனுஷ்காவின் நடிப்பை வெளிக் கொணரும் என்று கூறுகிறார்கள்.

இதுவரை ஆகாச ரமணா, பில்லா ஜமீன்தார் மற்றும் சுகுமருடு என்று 3 படங்களை அசோக் இயக்கியிருக்கிறார் இதில் நானி நடித்த பில்லா ஜமீன்தார் பிளாக் பஸ்டர் படங்களில் ஒன்றாக மாறியது குறிப்பிடத்தக்கது.

English summary
After Baahubali 2 Anushka once Again Cast in a Historic Film. G.Ashok's Next Movie Pagamadhi, Anushka to Play a Key Role in this Film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil