»   »  ஒரே நாளில் ருத்ரமா தேவி & இஞ்சி இடுப்பழகி.. இரட்டை சந்தோஷத்தில் அனுஷ்கா!

ஒரே நாளில் ருத்ரமா தேவி & இஞ்சி இடுப்பழகி.. இரட்டை சந்தோஷத்தில் அனுஷ்கா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அனுஷ்கா நடித்துள்ள ருத்ரமா தேவி மற்றும் இஞ்சி இடுப்பழகி படங்கள் ஒரே நாளில் வெளியாகவிருக்கின்றன.

அனுஷ்கா, அல்லு அர்ஜூன், ராணா நடிப்பில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள படம் ‘ருத்ரமா தேவி'. சரித்திர கதை. காகதீய வசம் ராணி ருத்ரமா தேவியாக அனுஷ்கா நடித்திருக்கிறார்.

குணசேகர் இயக்கியுள்ளார். இளையராஜா இசை அமைத்திருக்கிறார். பாகுபலி அளவுக்கு எதிர்ப்பார்க்கப்பட்ட படம் இது.

அக் 9-ல்

அக் 9-ல்

ருத்ரமா தேவி படத்தை தமிழில் தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது. அடுத்த மாதம் 9-ந் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

இஞ்சி இடுப்பழகி

இஞ்சி இடுப்பழகி

இதுபோல், ஆர்யாவுடன் அனுஷ்கா ஜோடி சேர்ந்து நடித்துள்ள ‘இஞ்சி இடுப்பழகி' படமும் ‘ருத்ராமாதேவி' வெளியாகும் அதே நாளில் திரைக்கு வருகிறது. இதனை இரு தினங்களுக்கு முன்புதான் அதிகாரப்பூர்வமாக பிவிபி சினிமா நிறுவனம் அறிவித்தது.

தமிழ் - தெலுங்கில்

தமிழ் - தெலுங்கில்

இந்தப் படமும் தெலுங்கிலும், தமிழிலும் வெளியாகிறது. தெலுங்கில் இந்தப் படத்துக்கு தலைப்பு சைஸ் ஜீரோ.

மகிழ்ச்சியில் அனுஷ்கா

மகிழ்ச்சியில் அனுஷ்கா

பிரகாஷ் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ‘பாகுபலி' பட இசை அமைப்பாளர் மரகதமணி இசை அமைத்திருக்கிறார். ஒரே நாளில் தனது இரண்டு படங்கள் ரிலீஸ் ஆவது அனுஷ்காவுக்கு இரட்டைக் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

English summary
Anushka's forthcoming movies Rudhrama Devi and Inji Iduppazhagi are releasing on the same day, October 9th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil