»   »  பேட்டியின்போது போன் செய்த நிருபரின் தாய்: அனுஷ்கா என்ன செய்தார் தெரியுமா?

பேட்டியின்போது போன் செய்த நிருபரின் தாய்: அனுஷ்கா என்ன செய்தார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பேட்டியின்போது நிருபரின் தாய் போன் செய்ய நடிகை அனுஷ்கா எடுத்துப் பேசியுள்ளார்.

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நடித்துள்ள பில்லோரி படம் வரும் 24ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் அவர் படத்தை விளம்பரப்படுத்துவதில் பிசியாக உள்ளார்.

அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நிருபர் ஒருவர் மைக்குகள் வைக்கப்பட்ட மேஜையில் தனது செல்போனை வைத்து பேட்டியை ரெக்கார்ட் செய்தார்.

அனுஷ்கா பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது நிருபரின் செல்போன் ஒலித்தது. அனுஷ்கா அதை எடுத்து பார்த்தபோது அம்மா காலிங் என்று வந்தது. உடனே அனுஷ்கா போனை எடுத்து ஹலோ ஆன்ட்டி, அவர் பேட்டியில் உள்ளார் பின்னர் உங்களுக்கு போன் செய்வார். நான் அனுஷ்கா பேசுகிறேன் என்று கூறினார்.

அம்மா அழைத்தால் அவரை காக்க வைக்கக் கூடாது என்று அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

English summary
Anushka Sharma answered a call on behalf of a reporter when his mother called him during an interview with the actress.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos