»   »  கோஹ்லியுடன் திருமணம் எப்பொழுது?: மனம் திறந்தார் அனுஷ்கா

கோஹ்லியுடன் திருமணம் எப்பொழுது?: மனம் திறந்தார் அனுஷ்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: காதலர் கோஹ்லியுடன் திருமணம் எப்பொழுது என்பது குறித்து பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருகிறார்கள். கோஹ்லி இந்த ஆண்டே அனுஷ்காவை திருமணம் செய்ய நினைத்தார். அனுஷ்கா மறுக்கவே இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் பிரிந்தனர்.

அதன் பிறகு மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டனர். இந்நிலையில் திருமணம் குறித்து அனுஷ்கா கூறுகையில்,

திருமணம்

திருமணம்

அனுஷ்காவுக்கு எப்பொழுது திருமணம் செய்து வைக்கப் போகிறீர்கள் என்று யாரும் என் குடும்பத்தாரை கேட்க மாட்டார்கள். என் பெற்றோர்கள் முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள். நானும் அப்படித் தான்.

என்னய்யா?

என்னய்யா?

என் சகோதரருக்கு திருமணம் எப்பொழுது என்றும் யாரும் கேட்க மாட்டார்கள். திருமணமானால் அடுத்து பேரக்குழந்தைகளை எதிர்பார்ப்பது மிகவும் சுயநலமாகும்.

திருமணம் என்றால் மக்கள் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என்று எனக்கு புரியவே இல்லை. நடிகை ராணி முகர்ஜிக்கு திருமணம் நடைபெற்றது யாருக்குமே தெரியாது.

தயார்

தயார்

மன ரீதியாக ஒருவர் தயாரான பிறகே திருமணம் செய்ய வேண்டும். பிறர் அழுத்தம் கொடுப்பதற்காக எல்லாம் திருமணம் செய்யக் கூடாது. எனக்கு திருமணம் செய்யும் ஆசை உள்ளது.

நடக்கும்போது

நடக்கும்போது

திருமணம் நடக்கும்போது நடக்கும் என்று நினைக்கிறேன். நான் மனரீதியாக தயாரான பிறகே திருமணம் செய்து கொள்வேன். திருமணம் என்பது ஜோக் அல்ல. இன்னொருவருடன் சேர்ந்து வாழ நம்மை நாமே தயார் செய்துகொள்ள வேண்டும். அப்படி நான் தயாரான பிறகு திருமணம் செய்வேன்.

கோஹ்லி

கோஹ்லி

கோஹ்லி முடிந்த அளவுக்கு சீக்கிரமாக அனுஷ்காவை திருமணம் செய்ய விரும்புகிறார். அனுஷ்கா சொல்வதை பார்த்தால் கோஹ்லியின் ஆசை தற்போதைக்கு நிறைவேறாது போன்று.

English summary
Bollywood actress Anushka Sharma said that she will get married once she is mentally ready for it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil