»   »  பத்த வச்சுட்டியே பரட்டை: பிரபாஸுக்கு ஓகே சொல்ல யோசிக்கும் அனுஷ்கா

பத்த வச்சுட்டியே பரட்டை: பிரபாஸுக்கு ஓகே சொல்ல யோசிக்கும் அனுஷ்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சாஹோ படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடிக்க கேட்டும் அனுஷ்கா இன்னும் ஓகே சொல்லவில்லையாம்.

பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் சாஹோ. இந்த படத்திற்காக அவர் தனது உடல் எடையை குறைத்து புது கெட்டப்பில் உள்ளார்.


பிரபாஸ் புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.


பிரபாஸ்

பிரபாஸ்

சாஹோ படத்தில் தனக்கு ஜோடியாக அனுஷ்காவை நடிக்க வைக்குமாறு பிரபாஸ் பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து இயக்குனர் சுஜீத் அனுஷ்காவிடம் படம் குறித்து பேசியுள்ளார்.


அனுஷ்கா

அனுஷ்கா

சாஹோ படத்தில் ஹீரோயினாக நடிக்க அனுஷ்கா உடனே சம்மதம் தெரிவிப்பார் என்று நினைத்தால் அவரோ ஓகே சொல்லாமல் இழுத்தடிக்கிறாராம். பிரபாஸுடன் மீண்டும் நடிக்கலாமா, வேண்டாமா என்ற யோசனையிலேயே உள்ளாராம்.


கிசுகிசு

கிசுகிசு

பாகுபலி 2 படத்தில் நடித்த போது பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் இடையே காதல் என்று கிசுகிசுக்கப்படும் நிலையில் சாஹோ படத்தில் நடிக்க அனுஷ்கா யோசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


பாலிவுட்

பாலிவுட்

அனுஷ்கா ஒரு புறம் யோசித்துக் கொண்டிருக்க மறுபக்கம் பாலிவுட்டில் ஹீரோயின் தேடும் பணியும் நடந்து கொண்டிருக்கிறதாம். முன்னதாக அனுஷ்காவுக்காக கத்ரீனா கைஃபை வேண்டாம் என்றார் பிரபாஸ்.


English summary
Anushka has been approached to play female lead of Prabhas starrer Saaho. But she is reportedly taking her own time to say 'yes'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil