»   »  கோஹ்லியை விட்டுட்டு ட்யூடுக்காக பாடிய அனுஷ்கா

கோஹ்லியை விட்டுட்டு ட்யூடுக்காக பாடிய அனுஷ்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ட்யூடுக்காக பாடல் பாடி அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் காதலியாச்சே, யார் இந்த ட்யூட் என்று வியக்க வேண்டாம். அனுஷ்கா செல்லமாக வளர்க்கும் லேப்ரடார் நாயின் பெயர் தான் ட்யூட். வெறும் ட்யூட் அல்ல ட்யூட் சர்மா.

Anushka sings not for Kohli but for her Dude

ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் பிசியாக இருந்த அனுஷ்கா தற்போது ட்யூடுடன் ரிலாக்ஸ் செய்கிறார். ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் வரும் புல்லயா பாடலை அவர் ட்யூடுக்கு பாடிக் காண்பிக்க அதுவோ அவரது முகத்தை நாக்கால் நக்கி பாட்டு பாடுவதை நிறுத்த வைத்துவிட்டது.

அப்படியும் விடாத அனுஷ்கா க்யூட்டி பை பாடலை ட்யூடுக்கு பாடிக் காண்பித்தார். இந்த இரண்டு பாடல்கள் பாடியபோது எடுக்கப்பட்ட வீடியோவை அனுஷ்கா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஏ தில் ஹை முஷ்கில் படம் வரும் 30ம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actress Anushka Sharma has sung for her Dude and posted the video on social networking sites.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil