»   »  அபர்ணா கொடுத்த விருந்து

அபர்ணா கொடுத்த விருந்து

Subscribe to Oneindia Tamil

அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் போல அவ்வப்போது ஏதாவது ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அபர்ணா சமீபத்தில் கொடுத்த விருந்துதான் கோலிவிட்டில் சூடான பேச்சாக உள்ளது.

புதுப்பேட்டையிலிருந்து சரவணன் படத்தின் மூலம் நடிகை ஆனவர் லயோலா காலேஜ் ரதி அபர்ணா. கருத்தம்மாவாக இருந்தாலும் கூட கருத்தான அழகுடன் கலக்கலாக இருப்பவர் அபர்ணா.

அவர் நடித்து மொத்தம் மூன்றே மூன்று படம்தான் வந்துள்ளது. ஏபிசிடி, சமீபத்தில் வெளியான நெஞ்சில் ஜில் ஜில். இந்த மூன்று படங்களுக்கும் அபர்ணா கணிசமான அளவுக்கு பைனான்ஸ் செய்ததாகவும் ஒரு செய்தி உண்டு.

நிறையப் படங்களில் நடிக்க அபர்ணாவுக்கு ஆர்வம் இருந்தாலும் கூட சரிவர வாய்ப்புகள் வராததால் அப்செட் ஆகியுள்ளாராம்.

பரவாயில்லை என்று கூறும் அளவிலான நடிப்பு, ஓரளவு அழகு, கிளாமருக்கேற்ற உடல் வாகு, நடனம் தெரியும் என சுமாராக எல்லாமே இருந்தும் கூட ஏன் வாய்ப்புகள் வரவில்லை என்று டிஸ்கஸ் செய்துள்ளார் அபர்ணா (மனசுக்குள்தான்).

அப்புறம்தான் தெரிந்தது, தனக்கு சினிமா உலகில் சரிவர தொடர்புகள் இல்லாததால்தான் இந்த தேக்கநிலை என்பதை உணர்ந்த அபர்ணா சமீபத்தில் ஒரு ஸ்டார் ஹோட்டலில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இயக்குனர்கள், பிஆர்ஓக்கள், மீடியேட்டர்கள், திரிஷா, ஷ்ரியா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் இந்த விருந்தில் கலந்து கொண்டனராம். வந்திருந்தவர்களிலேயே அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர்கள் ஷ்ரியாவும், திரிஷாவும்தானாம்.

இருவரும் படு கலக்கலான காஸ்ட்யூமில் வந்திருந்தனர். வந்தவர்கள் எல்லாம் அவர்களுடன்தான் அதிகம் பேசிக் கொண்டிருந்தார்களாம். ஆனால் அவர்கள் இருவரும் மட்டும் ஒருவருக்கொருவர் ஹாய் கூட சொல்லிக் கொள்ளவில்லையாம் (ஆய் புள்ளைங்)

இதில் கூத்து என்னவென்றால் விருந்து வைத்த அபர்ணாவை ஒருவரும் கண்டு கொள்ளாததுதான். அவர் காசில் திருப்திகரமாக சாப்பிட்டு விட்டு போகும்போது மட்டும் தாங்க்யூ அபர்ணா என்று சொல்லி விட்டுச் சென்றார்களாம்.

வச்ச விருந்து வேஸ்ட்டாப் போச்சே என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம் அபர்ணா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil