»   »  அபர்ணாவின் செகண்ட் ரவுண்ட்

அபர்ணாவின் செகண்ட் ரவுண்ட்

Subscribe to Oneindia Tamil

கறுப்பழகி அபர்ணாவுக்கு மீண்டும் யோகம் அடித்திருக்கிறது. படங்களே இல்லாமல் வீட்டில்முடங்கிக் கிடந்த அவர் கையில் இப்போது 5 படங்கள்.

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் பிளாப் ஆனதோடு அபர்ணாவை கண்டுகொள்வார் யாரும்இல்லாமல் போய்விட்டது கோடம்பாக்கத்தில்.

அவராக வலிந்து போய் தேடித் தேடி மலையாளத்தில் டிசம்பர் என்ற படத்தில் நடிக்க வாய்ப்புபெற்றார்.

இந் நிலையில் அர்ச்சனா, மெளனிகா, ரோகிணி என கருப்பு வைரங்களைத் தேடிப் போய் கேமராவில்தேவதைகளாய் காட்டும் பாலு மகேந்திராவுக்கு அபர்ணாவின் நிறமும் துள்ளலும் பிடித்துப்போய்விட, கூப்பிட்டு ஒரு போட்டோ செஷன் நடத்தினாராம்.

தனுஷ்- ப்ரியா மணியை வைத்து அது ஒரு கனாக் காலம் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாகஉன்னை வைத்து ஒரு படம் செய்கிறேன் என்று உறுதியளித்திருந்தாராம் பாலு.

ஆனால், தனுஷ் செய்த கால்ஷீட் குட்டிகலாட்டாவால் அந்தப் படப் பிடிப்பே நின்றுபோய்விட்டது.இந்தப் படம் எப்போது முடிய, நாம் எப்போது பாலு மகேந்திராவின் இயக்கத்தில் நடிப்பது என்றுநொந்து போயிருந்தார் அபர்ணா.

பாலு மகேந்திரா எடுத்துத் தந்த போட்டோக்களுடன் ஒரு ரவுண்டு மீண்டும் கோடம்பாக்கத்தை வலம்வந்த அபர்ணாவுக்கு அடுத்தடுத்து நான்கு பட வாய்ப்புக்கள் கிடைத்திருக்கின்றன.

அன்பிற்கினிய, கீர்த்தி, பயோடேட்டா, பிளாஷ்பேக் ஆகிய புதிய படங்களில் புக்ஆகியிருக்கிறார். வசதி பார்ட்டியான அபர்ணா, இந்தப் படங்களுக்கு பைனான்ஸ் செய்வதாகச்சொல்லித் தான் வாய்ப்பைப் பிடித்திருப்பதாகவும் ஒரு பேச்சு கோடம்பாக்கத்தில் உலாவி வருகிறது.

அப்படியா என்று அபர்ணாவிடம் கேட்டால், இல்லவே இல்லை என்கிறார்.

இதற்கிடையே ஸ்னேகா, மாளவிகா என அனைத்து ரக நடிகைகளும் பலரக பட்டுச் சேலைகளுக்கும்மாடல்களாக ஆடிப் பாடி டிவி விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருக்க, மேலும் பல நடிகைகளும்விளம்பரங்களில் நடிக்க சான்ஸ் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்க, அபர்ணாவோ தன்னைத்தேடி வரும் விளம்பரங்களிலும் நடிக்க மறுத்து வருகிறார்.

அது தனது சினிமா முயற்சிகளுக்கு செட்-பேக் ஆகிவிடும் என்று பயப்படுகிறாராம்.

மலையாளத்தில் ஒன்று, தமிழில் 4 என கைகொள்ளாத அளவுக்கு சான்ஸகளை வைத்துள்ளஅபர்ணாவுக்கு ஒரு பெரிய மன வருத்தம். இதில் எந்தப் படத்தில் முன்னணி ஹீரோவே இல்லை.எல்லோரும் அறிமுக ஹீரோக்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil