»   »  அபர்ணாவின் சந்தோஷம்

அபர்ணாவின் சந்தோஷம்

Subscribe to Oneindia Tamil

முகம் கொள்ளாத அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறார் கருப்பு ரோஜா அபர்ணா.

கலர் கொஞ்சம் கம்மி தான் என்றாலும் தன் இத்யாதி விஷயங்களால் அதை சீர்கட்டிவிடுபவர் இந்த அபர்ணா. தனுசுடன் இவர்அறிமுகமான புதுக்கோட்டையிலிருந்து சரவணனில் இவர் கட்டவிழ்த்துவிட்ட கவர்ச்சியை இன்னும் ரசிக சிகாமணிகள்மறக்கவில்லை.

ஆனால், அந்தப் படம் கொடுத்த நஷ்டம் அதன் தயாரிப்பாளரை மட்டுமல்ல, பிறரையும் அபர்ணாவிடம் இருந்து ஒதுக்கிவைத்துவிட்டது.

வெறுப்பாகிப் போன அபர்ணா வாய்ப்பு தேடி களத்தில் இறங்கி முயற்சித்துப் பார்த்தார். நல்ல வசதியான வீட்டுப் பொண்ணுதானே, படத்துக்கு பைனான்சும் பண்ணிட்டு அப்படியே நடிச்சுக்கோம்மா என்றனர் பல தயாரிப்பாளர்கள்.

அதுக்கு எதுக்கு நீங்க.. நாங்களே தயாரிச்சுக்க மாட்டோமா என்று சொல்லிவிட்டு திரும்பி வந்து வீட்டிலேயே முடங்கிவிட்டஅபர்ணாவை வலிய அழைத்தது மலையாள சினிமா.

அங்கே டிசம்பர் என்ற படத்தை முடித்துவிட்டு, இப்போது சபலம் என்ற படத்தில் ரசிகர்களை சபலப்படுத்தும் வகையில் உடல்திறமையைக் காட்டி நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்தும் ஒரு பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

அப்படியே மலையாளத்திலேயே கதையை ஓட்டிவிடலாம் என்றிருந்தவருக்கு இன்ப அதிர்ச்சி. திடீரென கன்னடப் படங்களில்நடிக்க அழைப்பு வந்துள்ளது. சும்மா போய் பார்ப்போம் என்று பெங்களூர் பக்கம் போனவரின் கையில் பல புதுப் பட ஆபர்கள்வந்து குவிந்துவிட்டனவாம்.

இதனால் இப்போது பெங்களூரில் தான் அதிகமாக சுற்றிக் கொண்டிருக்கிறார்.

இந் நிலையில் தமிழும் மீண்டும் அபர்ணாவை கண்டுகொள்ள ஆரம்பித்துவிட்டது. இதுவும் அவரே எதிர்பார்க்காதது தான்.அன்பிற்கினிய கீர்த்தி, பயோடேட்டா, பிளாஷ்பேக் (பெயர்கள் விரைவில் நல்ல தமிழுக்கு மாறலாம்) ஆகிய படங்கள் தவிர,இன்னும் பெயர் சூட்டப்படாத 2 படங்களும் புக் ஆகி இருக்கின்றன.

மலையாளம், கன்னடத்தோடு கதை முடிந்துவிடுமோ என்று பயந்திருந்த அபர்ணாவுக்கு தன்னை கோடம்பாக்கம் மீண்டும்கண்டுகொண்டதில் பெரும் மகிழ்ச்சி. அவரைச் சந்தித்தபோது படு மூடில் இருந்தார்.

செல்வச் செழிப்பான குடும்பம் என்பதால் பண விஷயத்தில் அபர்ணா பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. கொடுப்பதைவாங்கிக் கொண்டு நடிக்கத் தயாராக இருக்கிறார், அத்தோடு காட்டச் சொல்கிற அளவுக்கு தயங்காமல் கவர்ச்சி காட்டவும் தயார்என்கிறார்.

படத்தில் தனது காஸ்ட்யூம் செலவுகளைக் கூட அவரே பார்த்துக் கொள்ளத் தயாராம். சென்னை தி.நகரில் ரூப் கார்டனுடன் கூடியமாபெரும் வீட்டில் வசிக்கும் அபர்ணாவுக்கு மிகவும் பிடித்த நடிகர் ரஜினியாம். ரஜினிக்கு தங்கச்சியாக நடிக்க ஒரு ரோல்கிடைச்சா கூட போதும் என்கிறார். பிடித்த நடிகை குஷ்பு வாம்.

சான்ஸ் இல்லாமல் வீட்டில் சும்மா இருந்தபோது அபர்ணா தனது நேரத்தை வேஸ்ட் செய்யவில்லையாம். ஒரு நடன இயக்குனரைவைத்து கிளாசிகல், வெஸ்டர்ன் நடனங்களைக் கற்று முடித்திருக்கிறார்.

நான் சின்ன பொண்ணு தானே, எனக்கு இன்னும் நிறைய டைம் இருக்கு. என்னதான் பிற மொழிகளில் நடிச்சாலும் தமிழ்லமுன்னுக்கு வரணும், நிறைய நடிக்கணும், அதான் என் ஒரே ஆசை என்கிறார்.

காதல்..கீதல் ஏதாவது உண்டா? என்று கேட்டபோது, எனக்கு அந்த வயசு வரல என்று நெத்தியடியாக பதில் தந்தார்.

வலித்த நெத்தியைத் தடவிக் கொண்டே வெளியே வந்தோம்!!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil