twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காஷ்மீர் வெள்ளத்தில் சிக்கிய மலையாள நடிகை அபூர்வா போஸ்

    |

    திருவனந்தபுரம்: காஷ்மீர் மாநில மழை வெள்ளத்தில் மலையாள நடிகை அபூர்வா போஸ் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் பேய் மழையால் அங்கு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர்.

    இந்நிலையில் நடிகை அபூர்வா போஸ் உட்பட 150 மலையாளிகள் காஷ்மீர் சுற்றுலா சென்ற இடத்தில் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Apoorva Bose in flood affected areas Jammu and Kashmir

    மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் என்ற மலையாள படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அபூர்வா போஸ். இவர் 5 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் உள்பட 11 பேர் காஷ்மீரில் மலை ஏறும் பயி்ற்சிக்காக காஷ்மீர் சென்றனர்.

    இந்த பயிற்சியை முடித்து விட்டு திரும்பிய இவர்கள் ஸ்ரீநகரில் உள்ள காம்ரேடுஇன் என்ற ஓட்டலில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் இந்த ஓட்டலை வெள்ளம் சூழ்ந்தது. மாடி வரை வெள்ளத்தில் மூழ்கியது.

    இதையடுத்து அறைகளில் தங்கியிருந்தவர்கள் மேல் தளத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலை வரை அபூர்வா போஸ் கொச்சியில் உள்ள தனது குடும்பத்திருடன் போனில் பேசியுள்ளார். அதற்கு பின்னர் அவர் உள்பட யாரும் வீட்டில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையை காஷ்மீரில் சுற்றுலா சென்ற மலையாளிகளை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் உம்மன்சாண்டி பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார்.

    இதுகுறித்து திருவனந்தபுரத்தில் முதல்வர் உம்மன்சாண்டி கூறுகையில், காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 150க்கும் மேற்பட்ட மலையாளிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது 5 ஓட்டல்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

    ஆனால் உடனடியாக அவர்கள் அங்கிருந்து வர முடியாத நிலை உள்ளது. மலையாளிகளை மீட்க சிறப்பு விமானங்களை அனுப்புமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.

    English summary
    Apoorva Bose in flood affected areas Jammu and Kashmir
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X