»   »  அகிராவுக்காக பாலிவுட் போன லட்சுமி ராய்!

அகிராவுக்காக பாலிவுட் போன லட்சுமி ராய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'அகிரா' படத்தின் மூலமாக பாலிவுட் பட உலகில் அடி எடுத்து வைக்கிறார் லட்சுமி ராய். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சோனாக்‌ஷி சின்ஹா, முன்னணி இயக்குநர் அனுராக் காஷ்யப், சத்ருகன் சின்ஹா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'அகிரா'.

'அகிரா' என்பது ஜப்பானிய வார்த்தை. இந்த வார்த்தைக்கு பிரகாசமானவள், புத்திசாலியானவள் என்று பொருள். கடந்த மார்ச் 16ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

மௌனகுரு

மௌனகுரு

தமிழில் அருள்நிதி நடிப்பில் வெளிவந்த ‘மௌனகுரு' படத்தின் கதையே, முருகதாஸ் ஹிந்தியில் நாயகியாக மையாக வைத்து மாற்றியமைத்திருப்பதாக கூறப்படுகிறது.

நாயகிக்கு முக்கியத்துவம்

நாயகிக்கு முக்கியத்துவம்

சோனாக்ஷி சின்ஹாவை நாயகியாக்கி முருகதாஸ் ‘அகிரா' எனும் பாலிவுட் படத்தை தற்போது இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படுகிறது.

சத்ருகன் சின்ஹா

சத்ருகன் சின்ஹா

பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இந்தப் படத்தின் வில்லனாக நடிக்கிறார். சோனாக்‌ஷி சின்ஹாவின் தந்தை சத்ருகன் சின்ஹாவும் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார்.

அனிருத் இசையில்

அனிருத் இசையில்

'கஜினி'க்கு ஒளிப்பதிவு செய்த ஆர்.டி.ராஜசேகர்தான் இந்தப் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கிறது.

லட்சுமி ராய் அறிமுகம்

லட்சுமி ராய் அறிமுகம்

கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த ‘அகிரா'வின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தற்போது 2ம் கட்ட படப்பிடிப்பில் நடிகை லட்சுமி ராயும் கலந்து கொள்கிறார்.

உற்சாகத்தில் லட்சுமி ராய்

உற்சாகத்தில் லட்சுமி ராய்

அகிரா படத்தில் கெஸ்ட் ரோல்தான் என்றாலும் முதல்படமே முருகதாஸ் படம் என்பதால் மகிழ்ச்சியில் பூரித்து போயுள்ளாராம்

English summary
Director AR Murugadoss has given many hits in both Bollywood and Tamil film industry. His next project titled Akira has Sonakshi Sinha in the lead role. Shooting has started and the director has teamed up with the leading production house Fox Star Studios, after Holiday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil