»   »  அர்ச்சனாவின் வேகம்

அர்ச்சனாவின் வேகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

எஸ்.வி.சேகரின் புதல்வன் அஷ்வின் ஹீரோவாக அறிமுகமாகும் வேகம் படத்தின் நாயகி அர்ச்சனா வியர்க்க வைக்கிறார், அதாவது வியக்க வைக்கிறார்.

நாடகம், சினிமா, அரசியல் என பல அவதாரம் எடுத்து கலக்கி வரும் எஸ்.வி.சேகரின் மகன் அஷ்வின் இப்போது நாயகனாகி விட்டார். அப்பாவின் தயாரிப்பில் உருவாகும் வேகம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் பிரபுவும், குஷ்புவும் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். சேகரும் தலை காட்டுகிறார். கொஞ்சம் உப்பலாக தெரிந்தாலும் கூட ஹேண்ட்சமாக இருக்கிறார் அஷ்வின்.

நாயகி அர்ச்சனாவோ ஜம் ஜம்மென்று இருக்கிறார். நெடுநெடுவென்ற உயரம், கோதுமைக் கலர், கூர் மூக்கு, சிலிர்க்க வைக்கும் கிளாமர் வாகு என படு பாந்தமாக இருக்கிறார் அர்ச்சனா.

படத்தின் சில ஸ்டில்களைப் பார்த்தால் அர்ச்சனாவுக்கு படத்தில் நிறைய வேலை இருக்கும் போலத் தெரிகிறது. அஷ்வினும், அவரும் சம்பந்தப்பட்ட முத்தக் காட்சிகளில் ஒரு வித்தியாசம் தெரிகிறது.

விரசம் இல்லாமலும், அதேசமயம், விதிர்க்க வைக்கும் வகையிலும் இந்த முத்தக் காட்சிகளுக்குப் போஸ் கொடுத்துள்ளார் அர்ச்சனா. நெடிசலாக இருந்தாலும், நெகிழ வைக்கிறது அர்ச்சனாவின் அசரடிக்கும் அழகு.

படத்தில் ஆக்ஷனோடு, கிளாமரையும் சரி விகித சமானத்தில் கலந்து கொடுத்து அசத்தவுள்ளனராம்.

அஷ்வின் தேறுகிறாரோ இல்லையோ கண்டிப்பாக அர்ச்சனாவை தேற்றி விடும் கோலிவுட் என்று தைரியமாக சொல்லலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil