»   »  என்னாது, நடிகை த்ரிஷாவுக்கு பிடிவாரண்ட்டா?

என்னாது, நடிகை த்ரிஷாவுக்கு பிடிவாரண்ட்டா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை த்ரிஷாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பேச்சாக கிடக்கிறது.

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக தமிழக ரசிகர்கள் நடிகை த்ரிஷா மீது கோபத்தில் உள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பீட்டா அமைப்பை அவர் ஆதரிப்பதே ரசிகர்களின் கோபத்திற்கு காரணம்.

இந்நிலையில் த்ரிஷாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பேச்சாக கிடக்கிறது.

பிடிவாரண்ட்

பிடிவாரண்ட்

பிடிவாரண்ட் பிறப்பிக்கும் அளவுக்கு த்ரிஷா என்ன செய்தார் என்று விசாரித்தபோது பிடிவாரண்ட் அவரது தாய் உமா கிருஷ்ணனுக்கு பிறப்பிக்கப்பட்டது தெரிய வந்தது.

வழக்கு

வழக்கு

தனது மகள் த்ரிஷாவின் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்டதாக உமா பத்திரிகை ஒன்று மீது கடந்த 2005ம் ஆண்டு அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை த்ரிஷா அண்மையில் வாபஸ் பெற்றார்.

உமா

உமா

அவதூறு வழக்கு விசாரணையின்போது உமா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து சென்னை நீதிமன்றம் உமா கிருஷ்ணனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.

த்ரிஷா

த்ரிஷா

ஜல்லிக்கட்டு விவகாரத்தால் விமர்சனத்திற்குள்ளாகி வரும் நிலையில் த்ரிஷாவுக்கு எதிராக தான் அந்த பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது என்று தவறான தகவல் பரவிவிட்டது.

English summary
A court in Chennai has issued arrest warrant against actress Trisha's mother Uma Krishanan in connection with defamation case.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil