»   »  ஐஸ்வர்யா ராய் வீட்டில் ஏற்கனவே எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய இயக்குனர்

ஐஸ்வர்யா ராய் வீட்டில் ஏற்கனவே எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் ஐஸ்வர்யா ராய், ரன்பிர் கபூர் நெருக்கமாக இருக்கும் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கரண் ஜோஹார் நான்கு ஆண்டுகள் கழித்து இயக்கியுள்ள படம் ஏ தில் ஹை முஷ்கில். இந்த படத்தில் வித்தியாசமான முக்கோண காதல் கதையில் ரன்பிர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா நடித்துள்ளனர்.

ஐஸ்வர்யா ராய் மட்டும் அல்ல ரன்பிர் கபூரும் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார்.

ஐஸ்-ரன்பிர்

ஐஸ்-ரன்பிர்

ஏ தில் ஹை முஷ்கில் படத்தின் புகைப்படங்கள் சில வெளியாகின. அதில் ஐஸ்வர்யா ராயும், ரன்பிர் கபூரும் நெருக்கமாக இருந்ததை பார்த்து பச்சன் குடும்பத்தார் கோபத்தில் கொந்தளித்தார்கள் என்று கூறப்பட்டது.

மீண்டும்

மீண்டும்

ஏற்கனவே பச்சன் குடும்பத்தார் ஐஸ்வர்யா ராய் மீது கோபத்தில் இருக்கும் நிலையில் அவரும், ரன்பிரும் நெருக்கமாக இருக்கும் மேலும் சில புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அமிதாப்

அமிதாப்

ஐஸ்வர்யா ராய், ரன்பிர் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை நீக்குமாறு ஐஸின் மாமனார் அமிதாப் பச்சன் கரண் ஜோஹாரிடம் தெரிவித்தும் அவர் கேட்கவில்லை. இந்நிலையில் கரண் புகைப்படங்கள் மேல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சாக்லேட்

சாக்லேட்

படத்தில் வரும் ஒரு காட்சியில் ஐஸ்வர்யாவும், ரன்பிரும் ஒருவர் உடம்பில் உள்ள சாக்லேட்டை மற்றொருவர் நாக்கால் எடுப்பார்களாம். அந்த காட்சி குறித்த புகைப்படங்கள் வெளியானால் அமிதாப் வீட்டில் என்ன ரியாக்ஷனோ என்று பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

English summary
New intimate pictures of Aishwarya Rai and Ranbir Kapoor from Ae Dil Hai Mushkil has impressed the fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil