twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாழ்க்கைல நடிக்காதவங்களை பாகுபாடு பார்க்காம ஆதரிக்கிறேன்.. கருப்பு- வெள்ளை சவாலில் பிரபல நடிகை!

    By
    |

    சென்னை: நிஜ வாழ்க்கையில் நடிக்காதவர்களை பாகுபாடு பார்க்காமல் ஆதரிக்கிறேன் என்று கூறியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் பிரபல நடிகை.

    விஜய் ஆண்டனி நடித்த கொலைகாரன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஆஷிமா நர்வால். இவர் தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார்.

    இந்தப் படங்களை அடுத்து இப்போது, ராஜபீமா படத்தில் நடித்து வருகிறார் ஆஷிமா. இதில் ஆரவ் ஹீரோவாக நடிக்கிறார்.

    அதுக்கு 1008 பக்கம் இருக்கு.. விஜய், அஜித் என பாலாபிஷேகம் செய்து.. இயக்குனர் சேரன் கேட்ட கேள்வி!அதுக்கு 1008 பக்கம் இருக்கு.. விஜய், அஜித் என பாலாபிஷேகம் செய்து.. இயக்குனர் சேரன் கேட்ட கேள்வி!

    யாஷிகா ஆனந்த்

    யாஷிகா ஆனந்த்

    யோகிபாபு, நாசர், கே.எஸ்.ரவிகுமார், சாயாஜி ஷிண்டே உட்பட பலர் நடிக்கின்றனர். நடேஷ் சம்பத் இயக்கும் இந்தப் படத்தில், பிக்பாஸ் பிரபலங்கள் ஓவியா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. கொரோனா காரணமாக இந்தப் படத்தின் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

    கருப்பு வெள்ளை

    கருப்பு வெள்ளை

    இந்நிலையில், நடிகை ஆஷிமா நார்வல், பெண்களை ஆதரிக்கும் #WomanSupportingWoman என்ற ஹேஷ்டேக்கில் கருப்பு வெள்ளை போட்டோக்களை பதிவு செய்துள்ளார். பெண்களுக்கான அதிகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னெடுக்கும் வகையில், பெண்ணை ஆதரிக்கும் பெண் (#WomanSupportingWoman) என்ற ஹேஷ்டேக் உலக அளவில் கடந்த சில நாட்களாக டிரெண்டாகி வருகிறது.

    நடிகை ஆஷிமா நார்வால்

    நடிகை ஆஷிமா நார்வால்

    ஏராளமான பெண்கள் கருப்பு வெள்ளை புகைப்படங்களை, சமூக வலைதளங்களை தொடர்ந்து நிரப்பி வருகின்றனர். ஒருவர் தனது படத்தை வெளியிட்டு, வேறு சிலரையும் அதுபோல் வெளியிடத் தூண்டி சவால் விடுவார். ஏராளமான பெண்கள் இந்த ஹேஷ்டேக்கில் தங்கள் படங்களை வெளியிட்டு ஆதரவு தந்து வரும் நிலையில், இப்போது ஆஷிமா நார்வாலும் தனது போட்டோவை வெளியிட்டுள்ளார்.

    ஆதரிக்கிறேன்

    ஆதரிக்கிறேன்

    இதுகுறித்து விவரித்த ஆஷிமா நார்வால், 'நேர்மறை நோக்கத்துடன் நல்ல செயல்கள் செய்பவர்கள், நேர்மையாக இருப்பவர்கள், பிறருக்குத் தீங்கு செய்யாதவர்கள், நிஜ வாழ்க்கையில் நடிக்காதவர்கள் என்றிருக்கும் அனைவரையும் ஆண்-பெண் பால் பாகுபாடு பார்க்காமல் ஆதரிக்கிறேன். பெண் பெண்ணுக்கு ஆதரவு காட்டுகிறாளா அல்லது ஆண் ஆணுக்கு ஆதரவு காட்டுகிறானா என்பதல்ல விஷயம்.

    நோக்கம் மட்டுமே

    நோக்கம் மட்டுமே

    நல்லவர்களுக்கு நல்லவர்கள் ஆதரவு காட்ட வேண்டும் என்பதே முக்கியம். பல ஆண்கள் எனக்கு ஆதரவு காட்டியதால்தான் சிறந்த வாழ்க்கை எனக்கு அமைந்தது. ஆணோ, பெண்ணோ என்பது முக்கியமல்ல. எந்த பாலினத்தவர் என்றாலும், அவரது நோக்கம் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். எனது பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும் ஆண், பெண் அனைவருக்கும் இந்த கறுப்பு வெள்ளைப் படத்தை சமர்ப்பிக்கிறேன்' என்று கூறியுள்ளார் ஆஷிமா நார்வால்.

    English summary
    After accepting #WomanSupportingWoman challenge, actress Ashima Narwal says, “I think it’s no longer about man and woman. I have accepted the challenge to help and support all individuals'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X