»   »  வாய்ப்புகள் குவியுது ஆஷினுக்கு

வாய்ப்புகள் குவியுது ஆஷினுக்கு

Subscribe to Oneindia Tamil

முதல் படம் வெளிவருவதற்கு முன்பே ஆஷினுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிகிறது.

தெலுங்கில் நம்பர் ஒன் இடத்தைப் பிடிப்பதற்கு த்ரிஷா, ஆர்த்தி அகர்வால் ஆகியோருடன் முட்டி மோதிக்கொண்டிருந்த ஆஷினை உள்ளம் கேட்குமே படத்துக்காக தமிழுக்கு அழைத்து வந்தார் ஒளிப்பதிவாளர் கம்இயக்குனர் ஜீவா.

வீராணம் திட்டத்தைப் போல் நீண்ட காலமாக தயாரிக்கப்பட்டு வந்த இந்தப் படம் ஒரு வழியாக இந்த வாரம்திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் லைலாவும் இருக்கிறார். உள்ளம் கேட்குமே படத்தின் ஸ்டில்ஸைப் பார்த்துஆஷினுக்கு பட வாய்ப்புகள் குவிந்து விட்டது.

தெலுங்கிலும் கைவசம் படங்கள் இருப்பதால், தமிழில் நல்ல பேனர், நல்ல இயக்குனர் பார்த்து படங்களை ஒத்துக்கொள்கிறார். இப்போது எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும், மிரட்டல்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாகவும், சூர்யாவுக்கு ஜோடியாக சென்னையில் ஒரு மழைக்காலம் படத்திலும்நடிக்கிறார்.

இதில் எம்,குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. மிரட்டல் படம்ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இந்தப் படங்கள் எல்லாம் முடிந்த பின்புதான் அடுத்து படங்களைக் கமிட் செய்வதுஎன்ற முடிவில் இருக்கிறாராம் ஆஷின்.

எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் நதியாவின் போர்ஷன் முடிந்து விட்டது. இப்போதைக்கு தமிழ்சினிமாவில் அழகான அம்மா என்றால் நதியாதான். பழைய அழகு சற்றும் குறையாமல் பளிச்சென இருப்பதால்தயாரிப்பாளர்கள் நதியாவை மொய்க்கிறார்கள். எல்லாம் அம்மா கேரக்டர் வாய்ப்புகள்.

ஆனால் நதியாவுக்கு தொடர்ந்து அம்மா வேடங்கள் நடிப்பதில் விருப்பமில்லை. கதை நன்றாக இருந்ததால்தான்இந்தப் படத்தையே ஒப்புக் கொண்டேன். இதுபோல் கதை கிடைத்தால் தொடர்ந்து நடிப்பது பற்றி யோசனைஇருக்கிறது என்று கூறியவாறே லண்டனுக்கு பறந்து விட்டார்.

எம்,குமரனுக்கு அம்மாவாக நடிக்க நதியா வாங்கிய சம்பளம் ரூ.10 லட்சம். இது கோலிவுட்டில் இரண்டாம் வரிசைகதாநாயகிகள் வாங்கும் சம்பளமாகும். நதியா அழகான அம்மா மட்டுமல்ல... காஸ்ட்லியான அம்மாவும்தான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil