»   »  மாதவனுக்கு நோ சொன்ன ஆஷின்

மாதவனுக்கு நோ சொன்ன ஆஷின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாதவனுக்கு ஜோடியாக தம்பி என்ற படத்தில் நடிக்க ஆஷின் மறுத்துள்ளார்.

எதிரி, ஆயுத எழுத்துக்குப் பின் சற்று தொய்ந்திருந்த மாதவனின் மார்க்கெட் இப்போது மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.பாசில் இயக்கத்தில் ஒரு படம், கருப்பன், வெட்டிப்பயல் ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் மாதவனுக்கு மேலும்இரண்டு புதிய படங்கள் கிடைத்துள்ளன.

ஒன்று நாசரின் தயாரிப்பில் கே.எஸ்.அதியமான் இயக்கும் படம். மற்றொன்று மின்னலே, மஜ்னு, அரசாட்சி படங்களைத்தயாரித்த சி.டி.வி. நிறுவனத்தின் தயாரிப்பில் சீமான் இயக்கும் படம்.

10 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் கதாநாயகர்களிடம் அடிவாங்கி, அடிவாங்கி சேர்த்து வைத்த பணத்தை எல்லாம்சொந்தப் படங்கள் எடுத்து தீர்த்தவர் நடிகர் நாசர்.

தேவதை, மாயன், பாப்கார்ன் என்று இவர் தயாரித்த படங்கள் எல்லாம் இவரது பணத்தைக் கரைத்ததோடு, கடனாளியாகவும்ஆக்கியது. ஆனாலும் மனிதர் சினிமா மீதான தனது காதலை விடுவதாயில்லை.

தற்போது கே.எஸ்.அதியமான் கூறிய கதையொன்று மிகவும் பிடித்துப் போக, அதை மாதவனை வைத்துத் தயாரிக்கமுடிவெடுத்திருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக இந்திப் படங்களில் பிஸியாக இருக்கும் கே.எஸ்.அதியமான் தற்போதுநாசருக்காக மீண்டும் தமிழுக்கு வருகிறார்.

இந்தப் படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

இதற்கிடையே, பிரஷாந்த், ஸ்னேகா நடிப்பில் ஆயுதம் படத்தை தயாரித்து வரும் சி.டி.வி. நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பில்கதாநாயகனாக நடிக்க மாதவனை ஒப்பந்தம் செய்துள்ளது. தம்பி என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை சீமான்இயக்குகிறார்.

இந்தப் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க ஆஷின் மறுத்துவிட்டார். காரணம் என்னவென்றால் காட்ஃபாதர் படத்தில்அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததுதான்.

மாதவனை விட அஜீத்துக்கு ஸ்டார் வேல்யூ அதிகம் என்பதால்தான் ஆஷின், காட்ஃபாதருக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்ஆஷின்.

இப்போது தம்பி படத்திற்கு கதாநாயகியைத் தேடும் வேட்டை மும்முரமாக நடக்கிறது. கதாநாயகி இன்னும் முடிவாகாவிட்டாலும்மாதவன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

காதல், நகைச்சுவை, அடிதடி கலந்து மசாலாப் படமாக இது வளர்கிறது.

ஆஜீத்துக்காக தன்னை புறக்கணித்த ஆஷின் மீது கடுப்பில் இருக்கிறாராம் மாதவன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil