»   »  ஆஷினின் சம்பள மிரட்டல்

ஆஷினின் சம்பள மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

தெலுங்கில் கொடுப்பது போல தமிழிலும் ரூ.25 லட்சம் சம்பளமாக வேண்டும் என்று கூறி கோலிவுட் தயாரிப்பாளர்களை அதிர வைத்துவருகிறார் நடிகை ஆஷின்.

ஆஷின் நடித்து தமிழில் ஒரே ஒரு படம் தான் வெளியாகி இருக்கிறது. இவர் முதலில் தமிழில் ஒப்பந்தம் ஆன உள்ளம் கேட்குமே ரீலிஸேஆகாமல் பெட்டியில் தூங்கிக் கொண்டிருக்க, இரண்டாவதாக நடித்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி முந்திக் கொண்டு வெளியானது.

படம் சூப்பர் ஹிட் என்று சொல்ல முடியாவிட்டாலும், போட்ட முதலுக்கு பாதகமில்லை என்று அளவில் ஓடியது. இருப்பினும் ஆஷினுக்குஇரண்டு படங்கள் ஒப்பந்தமாகியுள்ளன.

அஜீத்துடன் காட்பாதர் படத்தில் நடித்து வரும் ஆஷின், இப்போது சூர்யாவிற்கு ஜோடியாக கஜினி என்ற படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டுள்ளார்.

இந்தப் படத்தை இயக்கப்போவது ரமணா இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். முதலில் இந்தப் படத்தை அஜீத்தை வைத்துத்தான் இயக்குவதாகஇருந்தது. படத்திற்கு மிரட்டல் என்று பெயரிட்டிருந்தார்கள்.

ஆனால் போட்டோ செஷனுடன் படத்தை அஜீத் டிராப் செய்துவிட, அதே கதையை சூர்யாவை வைத்து கஜினி என்ற பெயரில் முருகதாஸ்எடுக்கவிருக்கிறார்.


மிரட்டல் படத்திற்கு ஆஷின் கொடுத்திருந்த கால்ஷீட்டை அப்படியே கஜினி படத்திற்கு யூஸ் பண்ணத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

நடிப்புக்கு சூர்யா, ஆஷின், பிரகாஷ்ராஜ், இசைக்கு ஹாரீஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவுக்கு ராஜசேகர் (காக்க காக்க ஒளிப்பதிவாளர்) எனஅசத்தலாக செட் சேர்த்திருக்கிறார் முருகதாஸ்.

சுள்ளான் படத்தை தயாரித்து நொந்துபோன சேலம் சந்திரசேகரன்தான் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகும் கஜினியில், வித்தியாசமான திரைக்கதை உத்தியை முருகதாஸ் பயன்படுத்தியிருக்கிறாராம்.

அதுவுமில்லாமல் சூர்யாவிற்கு தமிழ் சினிமாவில் இதுவரை எந்த கதாநாயகனாகும் ஏற்று நடிக்காத பாத்திரமாம் (ஒருவேளை அமெரிக்கஜனாதிபதியாக வருகிறாரோ?)

இயக்குநர் ஷங்கர் பாணியில் பாடல் கம்போஸிங்கிற்கு ஹாரீஸ் ஜெயராஜை முருகதாஸ் சிங்கப்பூர் அழைத்துச் சென்றிருக்கிறார்.

இந்த மாதம் படப்பிடிப்பைத் தொடங்கிவிருக்கிறார்கள். மைசூர், கொல்கத்தா, பெங்களூர், ஹாங்காங், லண்டன் ஆகிய இடங்களில்படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

இதற்கிடையே இரண்டு முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்கும் தைரியத்தில், ஆஷின் தனது சம்பளத்தை எக்குத் தப்பாக உயர்த்தியுள்ளார்.

தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்களிடம், தெலுங்கில் எனக்கு 25 லட்சம் தருகிறார்கள். அதே சம்பளத்தை தமிழில் தந்தால் கால்ஷீட்தருவேன் என்று கூறுகிறார்.

அவ்வளவு சம்பளம் தந்தாலும் படு கிளாமராக நடிக்க மாட்டேன் என்றும் கூறுகிறார்.

அப்ப, கூடிய சீக்கிரம் கோடம்பாக்கத்தை விட்டு பெட்டியைக் கட்ட வேண்டியதுதான் என்றபடி தயாரிப்பாளர்கள் நடையைக்கட்டுகிறார்கள்.

Please Wait while comments are loading...