»   »  எனக்கு சான்ஸ் கொடுத்தே ஆக வேண்டும்: இயக்குனர்களுக்கு நடிகை அன்புத் தொல்லை

எனக்கு சான்ஸ் கொடுத்தே ஆக வேண்டும்: இயக்குனர்களுக்கு நடிகை அன்புத் தொல்லை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆஸ்னா ஜவேரி தமிழ் கற்றுக் கொண்டுவிட்டாராம். இதனால் தான் தமிழ் கற்றுக் கொண்டதை சொல்லியே இயக்குனர்களிடம் சான்ஸ் கேட்டு அன்புத் தொல்லை கொடுக்கிறாராம்.

மும்பையை சேர்ந்தவர் ஆஸ்னா ஜவேரி. சந்தானம் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயும் படம் மூலம் ஹீரோயின் ஆனவர். இதையடுத்து மீண்டும் சந்தானத்துடன் சேர்ந்து இனிமே இப்படித்தான் படத்திலும் நடித்தார்.

தற்போது அவர் தமிழ் படங்களில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆஸ்னா

ஆஸ்னா

ஆஸ்னா நகுல் ஜோடியாக பிரம்மா. காம் படத்திலும், ஆரி ஜோடியாக நாகேஷ் திரையரங்கம் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் ஒரு புதுப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தமிழ்

தமிழ்

கோலிவுட்டில் ஒரு இடத்தை பிடிக்க விரும்பும் ஆஸ்னா தமிழ் கற்றுக் கொண்டுள்ளார். தற்போது அவர் நன்றாக தமிழில் பேசி அசத்துகிறார். முதல் இரண்டு படங்களில் நடித்தபோது அவருக்கு தமிழ் சுத்தமாக தெரியாது.

இயக்குனர்கள்

இயக்குனர்கள்

தனக்கு தமிழ் பேச வராது என்று கூறி ஒதுக்கிய இயக்குனர்களை அணுகி பார்த்தீங்களா எப்படி தமிழ் பேசுகிறேன், இப்ப நீங்க எனக்கு சான்ஸ் கொடுத்தே ஆக வேண்டும் என்று அன்புத் தொல்லை கொடுக்கிறாராம் ஆஸ்னா.

நடிகைகள்

நடிகைகள்

இந்தி நடிகைகள் பலர் பல ஆண்டுகளாக தமிழ் படங்களில் நடித்தும் தமிழ் கற்காத நிலையில் ஆஸ்னா தமிழ் கற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Ashna Zaveri's special request to directors Actress Ashna Zaveri has learnt to speak in tamil and requests directors to cast her in their movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil