»   »  பிஸியாகும் ஆசின்

பிஸியாகும் ஆசின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தெலுங்குப் படத்தில் இளம் நடிகர் பிரபாஸின் அம்மா வேடத்தில் நடிக்க ஒத்துக் கொண்ட முன்னாள் நாயகி கஸ்தூரி இப்போது அப்படத்திலிருந்து விலகி விட்டாராம்.

தசாவதாரத்தை முடித்துக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஆசின், அதை முடித்து விட்டு மும்பைக்குப் பறக்கிறார். இந்தி கஜினியில் பிசியாகப் போகும் அவர் அதை முடித்து விட்டுத்தான் அடுத்த படம் பற்றியே சிந்திப்பாராம்.

கமல்ஹாசனுடன் தசாவதாரம் படத்தில் இரட்டை வேடங்களில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறார் ஆசின். இடையில் கிடைத்த கேப்பில் விஜய்யுடன் போக்கிரித்தனம் செய்தார். அப்படம் வெளியாகி வசூலில் கல்லாக் கட்டிக் கொண்டிருப்பதால், சந்தோஷமாக கமலுடன் கலைச் சேவை புரிந்து கொண்டிருக்கிறார்.

இப்படத்திற்காக ஆசின் கொடுத்த கால்ஷீட் அடுத்த மாதத்துடன் முடிகிறதாம். முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருப்பதால் படு திரில்லாக ரிசல்ட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.

கமலுக்கும், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருக்கும் காட்சியில் திருப்தி வந்தாலும், தனக்கும் திருப்தி வரும் வரை நடித்துக் கொடுக்கிறாராம் ஆசின். படத்தோடு அந்த அளவுக்கு இன்வால்வ் ஆகி விட்டாராம்.

தசாவதாரத்தை முடித்த பின்னர் இந்தி கஜினிக்கு தயாராகிறார். முதலில் இந்தி கல்பனா கேரக்டருக்கான சில ஒத்திகைகளை இங்கேயே பார்த்து விட்டு பிறகுதான் மும்பைக்கு பிளேன் பிடிக்கிறாராம்.

தமிழில் செய்ததை விட இந்தியில் இன்னும் சற்று வித்தியாசமாக, அங்குள்ள ரசிகர்களின் டேஸ்ட்டுக்கு ஏற்ப செய்து அசத்தப் போகிறாராம் ஆசின். இதற்காக சில மேட்டர்களைப் பிடித்து வைத்துள்ளாராம்.

கஜினி மூலம் இந்தியிலும் துண்டைப் போட்டு ரவுண்டு கட்டும் ஆசையில் உள்ள ஆசின், இந்தப் படத்திலும் தனக்கே நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்தற்காக இயக்குநர் முருகதாஸை நேரில் சந்தித்துப் மனதார பாராட்டி விட்டாராம்.

கஜினியை முடித்து விட்டுத்தான் மறுபடியும் கோலிவுட் பக்கம் வருவாராம். அதன் பின்னர்தான் அடுத்த படங்களை முடிவு செய்யப் போகிறாராம்.

ஆசின் டெபுடேஷனில் போகிறார், ரெபுடேஷனுக்காக காத்திருக்கும் நடிகைகள் முயற்சிக்கலாம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil