»   »  வீடு விரும்பும் ஆசின்!

வீடு விரும்பும் ஆசின்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பைக்கராக மாறி வரும் ஆசின் அங்கு தனியாக, அழகாக ஒரு வீடு கிடைத்தால் நலம் என்று விருப்பப்படுகிறாராம். இப்போதைக்கு ஃபிளாட்டில்தான் தங்கியிருக்கிறாராம்.

கடந்த வாரம் நிரந்தரமாக மும்பைக்கு இடம் பெயர்ந்தார் ஆசின். தமிழ், தெலுங்கில் வெற்றிக் கொடியேற்றி விட்ட ஆசின் இப்போது இந்தியில் இமாலாய வெற்றியை குறி வைத்து அங்கு களம் புகுந்துள்ளார்.

ஆமிர்கானுடன், இந்தி கஜினியில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இதற்கு வசதியாக சென்னையில் தான் தங்கியிருந்த ஹோட்டலைக் காலி செய்து விட்டு மும்பைக்குப் போய் விட்டார். அங்கிருந்தபடிதான் இப்போது ஷூட்டிங்குகளுக்கு வந்து செல்கிறார்.

இப்போது தமிழில் கமலுடன் தசாவதாரம், சூர்யாவுடன் வேல் ஆகிய படங்களில் மட்டும் நடிக்கிறார் ஆசின். புதிய படங்கள் எதையும் தமிழில் ஒத்துக் கொள்ளவில்லை.

ஆமிர்கானுடன் கஜினி தவிர, மேலும் ஒரு இந்திப் படத்தில் புக் ஆகியுள்ளார். ராகேஷ் மேஹ்ரா இயக்கத்தில் உருவாகவுள்ள அப்படத்துக்கு டெல்லி 6 என்று பெயரிட்டுள்ளனர். கஜினியை முடித்து விட்டு இப்படத்துக்குப் போகிறார் ஆசின்.

இதுதவிர ஆங்கிலத்திலும் ஒரு படத்தில் நடிக்க பேச்சு நடந்து வருகிறதாம். இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்த ஆசின், நிரந்தரமாக மும்பையில் தங்க முடிவு செய்தாராம்.

இப்போதைக்கு ஃபிளாட்டில் தங்கியிருக்கிறார். அவரது ஃபிளாட், லோகந்த்வாலா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில், 20வது தளத்தில் உள்ளதாம்.

தனது மும்பை பெயர்ச்சி குறித்து ஆசின் நம்மிடம் கூறுகையில், இந்தியிலும் கூட நான் செலக்டிவ்வாகத்தான் நடிப்பேன். தற்போது 3 இந்திப் படங்களில் கமிட் ஆகியுள்ளேன். அதேசமயம் தமிழையும் மறக்க மாட்டேன். என்னை வளர்த்து ஆளாக்கிய திரையுலகம் அல்லவா.

எனக்கு ஃபிளாட் சிஸ்டம் பிடிக்கவில்லை. விரைவில் தனி வீடு பார்த்து போய் விட வேண்டியதுதான் என்கிறார் ஆசின்.

கஜினி ரிலீஸுக்குப் பிறகு கனவு கண்டிப்பாக நிறைவேறி விடும், டோண்ட் ஒர்ரி ஆசின்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil