»   »  நிலா தள்ளாடி கில்லாடி!

நிலா தள்ளாடி கில்லாடி!

Subscribe to Oneindia Tamil

கில்லாடி படம் டமால் என பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டதால் படு அப்செட் ஆகியுள்ளார் நிலா.

பரத், நிலா நடிக்க பூஜை போடப்பட்ட படம் கில்லாடி. வெங்கடேஷ்தான் இயக்குநர். பூஜை போட்ட கையோடு வேகமாக படப்பிடிப்பையும் தொடங்கினர். கிட்டத்தட்ட முக்கால்வாசிப் படத்தை முடித்தும் விட்டார்கள்.

ஆனால் திடீரென தயாரிப்பாளர் சேலம் சந்திரேசகருக்கு என்ன ஆனதோ, தெரியவில்லை. படப்பிடிப்பை மறு உத்தரவு வரும் வரை வெயிட்டிங்கில் போட்டு வைக்குமாறு கூறி விட்டார். இதனால் படம் பாதியிலேயே நின்று போனது.

இந்தப் படத்திற்கு முன்புதான் சேலம் சந்திரசேகர் விஜயகாந்த்தை வைத்து சபரி என்ற மாபெரும் மண்டையிடிப் படத்தை எடுத்து, படு அடி வாங்கி அதிர்ச்சியில் மூழ்கியிருந்தார்.

இந்தப் படத்தால் சேலம் சந்திரசேகருக்கு, சேலத்துக்குத் திரும்பிப் போகக் கூட கையில் காசு இல்லாத அளவுக்கு பெரும் நஷ்டமாம். கில்லாடி படத்தை ஆரம்பித்து விட்டதால் அதை முடிக்க பெருமளவில் பணம் தேவைப்பட்டுள்ளது. ஆனால் பணம் கிடைக்க தாமதமாகியதால்தான் படத்தை பாதியிலேயே நிறுத்த உத்தரவிட்டாராம் சந்திரசேகர்.

கில்லாடியின் முக்கால்வாசிக் காட்சிகள் முடிந்து விட்ட நிலையில் கிளைமேக்ஸும், சில பாடல்களும் மட்டுமே ஷூட் செய்ய வேண்டியுள்ளதாம். ஆனால் பாதியிலேயே படத்தை நிறுத்தும்படி தயாரிப்பாளர் கூறியதால் கில்லாடியை விட்டு விட்டு அடுத்த படத்துக்குப் போய் விட்டார் வெங்கடேஷ்.

சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான ஜூனியர் சிவாஜி நடிக்கும் சிங்கக்குட்டி என்ற படத்தை தற்போது இயக்கவுள்ளார் வெங்கடேஷ். இந்த ஜூனியர் சிவாஜி, நடிகை ஸ்ரீபிரியாவின் அக்காள் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கில்லாடி இப்படி தள்ளாடிக் கொண்டிருப்பதால் அப்செட் ஆகியுள்ளாராம் நிலா. இதுகுறித்து கேட்டபோது, கில்லாடி பாதியில் நின்று என்னை அப்செட் ஆக்கி விட்டது. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. கடைசியாக நான் நடித்த படம் லீ. அந்தப் படம் நன்றாக ஓடியதால், கில்லாடி படமும் சிறப்பாக ஓடி பிரேக் தரும் என எதிர்பார்த்தேன்.

தயாரிப்பாளருக்குப் பிரச்சினை தீர்ந்து மீண்டும் கில்லாடி தொடங்கும் என்று நம்புகிறேன் என்றார் எதிர்காலம் அவுட் ஆப் ஃபோகஸாக கண்ணில் தெரிய.

நிலாவுக்காகவாவது படத்தை சீக்கிரமா எடுத்து முடிங்க அய்யாக்களே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil