»   »  மிராண்டா மீனாட்சி

மிராண்டா மீனாட்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மிராண்டா மீனாட்சி என்ற கலக்கல் கேரக்டரில் வேல் படத்தில் நடிக்கிறார் ஆசின்.

பெப்சி உமாவைத் தெரியாத தமிழர்கள் எங்குமே இருக்க முடியாது. அவரை விவேக் கூட தனது படங்களில் மிமிக்ரி செய்து அசத்தியுள்ளார். அந்த அளவுக்கு உமா படு பாப்புலர்.

இப்போது அதேபோன்ற கேர்க்டரில் ஆசின் நடிக்கிறார். சூர்யா ஹீரோவாக நடிக்க, ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் வேல் படத்தில்தான் ஆசினுக்கு இந்த ரோல் கொடுக்கப்பட்டுள்ளது.

அப்படியா ஆசின் என்று அவரிடம் போய் கேட்டபோது, ஹய்யோ, இதையெல்லாம் உங்களுக்கு யார் சொன்னது என்று ஆச்சரியப்பட்டார். பின்னர் புன்னகையுடன் அவரே ஒத்துக் கொண்டார்.

டிவி ஆங்கர் ரோலில் நான் வேல் படத்தில் நடிப்பது உண்மைதான். எனது கேரக்டரின் பெயர் மிராண்டா மீனாட்சி. படு ஜாலியான, சேஷ்டையான குணாதிசயம் கொண்ட பெண்ணாக எனது கேரக்டர் அமைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஹரி இந்த கேரக்டர் குறித்துக் கூறியதுமே நான் சந்தோஷமாகி விட்டேன். உடனடியாக டிவி ஆங்கர்களை ஸ்டடி செய்ய ஆரம்பித்து விட்டேன். இதுபோன்ற நாட்டியான ரோல்களில் நடிப்பது என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்றார்.

இந்திக்குப் போயுள்ள போக்கிரியில் சல்மான் கானுடன் ஜோடி போடும் வாய்ப்பு நழுவினப் போனது ஆசினுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளதாம். இதுகுறித்து கூறுகையில், இயக்குநர் பிரபுதேவா சல்மான் கானுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று என்னை அணுகியபோது, நான் வேல், தசாவதாரம், கஜினி ஆகிய படங்களில் படு பிசியாக இருந்தேன்.

இதனால் இந்தி போக்கிரிக்கு என்னால் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போய் விட்டது. அதனால்தான் போக்கிரியில் நான் நடிக்க இயலாமல் போனது என்று ஆதங்கத்துடன் கூறினார்.

அந்தக் கான் போனால் என்ன, அதுதான் அமீர் கான் கிடைத்துள்ளாரே! இப்போது இந்தி கஜினிக்காக, அமீர்கானுடன் சுட்டும் விழிச் சுடரே, ஒரு மாலை இளவெயில் நேரம் ஆகிய பாடல்களுக்காக டூயட் பாடுவதில் பிசியாக இருக்கிறாராம் ஆசின்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil