»   »  'சொந்தக் குரல்'-ஆசின் வருத்தம்!

'சொந்தக் குரல்'-ஆசின் வருத்தம்!

Subscribe to Oneindia Tamil


தசாவதாரம் படத்தில்தான் முதல் முறையாக சொந்தக் குரலில் பேசியிருப்பதாக கூறப்படுவது தனக்கு வருத்தம் தந்துள்ளதாக ஆசின் கூறியுள்ளார்.

Click here for more images

வேல் படத்தின் ஷூட்டிங்குக்கா சூர்யாவுடன் ஸ்விட்சர்லாந்து சென்றிருந்த ஆசின் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியுள்ளார்.

ஊர் வந்து சேர்ந்தவருக்கு தசாவதாரம் யூனிட்டால் ஒரு மன வருத்தம் ஏற்பட்டுள்ளதாம். தசாவதாரம் படத்தின் முதல் அதிகாரப்பூர்வ பத்திரிக்கை செய்தி சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதில் கமல், ஆசின், மல்லிகா ஷெராவத் ஆகியோர் இடம் பெற்றுள்ள படங்கள் இடம் பெற்றிருந்தன. மேலும், படம் குறித்தும் சில குறிப்புகள் இடம் பெற்றிருந்தன.

ஆசின் சொந்தக் குரலில், பிராமணப் பெண் வேடத்தில் பிரமாதமாக டப்பிங் கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது. முதல் முறையாக ஆசின் தனது சொந்தக் குரலில் வசனம் பேசியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

இதுதான் ஆசினுக்கு விசனத்தைக் கொடுத்துள்ளதாம். இதுகுறித்து ஆசின் கூறுகையில், எனது முதல் படமான எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி படம் முதலே நான் சொந்தக் குரலில்தான் பேசி நடித்து வருகிறேன்.

ஆனால் இதை தசாவதாரம் படக்குழுவினர் மறந்தது ஆச்சரியம் அளிக்கிறது.

எம். குமரன் முதல் போக்கிரி வரை நான் சொந்தக் குரலில்தான் பேசியுள்ளேன். கஜினி இந்திப் படத்திலும் கூட நான் சொந்தக் குரலில்தான் பேசி நடிக்கிறேன்.

தசாவதாரம் படத்தில் வசனம் பேசுவதற்காக பிரத்யேக கவனம் எடுத்துக் கொண்டு, தமிழ்ப் பிராணமப் பெண் போல வசனம் பேசியுள்ளேன். தஞ்சாவூர் பக்கம் பேசப்படும் பிராமண பாஷையை இதில் நான் பேசியுள்ளேன்.

ஒரு முழுமையான நடிகையாக திகழ வேண்டுமானால் அந்த நடிகை சொந்தக் குரலில் பேசி நடிக்க வேண்டும். அப்போதுதான் அந்த நடிகைக்கும், அவர் ஏற்ற கேரக்டருக்கும் முழுப் பரிமாணம் கிடைக்கும் என்றார்.

வேல் படத்தின் முதல் பாதிப் படத்துக்கான வசனத்தை பேசி முடித்து விட்டாராம் ஆசின். அதுவும் ஒன்றரை நாட்களில் அதை முடித்துக் கொடுத்துள்ளாராம்.

விசனத்தை விடுங்க, விருது கிடைக்குமான்னு பாருங்க!

Read more about: asin, dasavatharam, kamal

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil