»   »  ஆசினின் புதிய சாதனை

ஆசினின் புதிய சாதனை

Subscribe to Oneindia Tamil
Click here for more images
தசாவதாரம் படத்தின் 2ம் பகுதி டப்பிங்கை ஒரே நாளில் முடித்துக் கொடுத்து அசத்தியுள்ளார் ஆசின்.

முதல் படத்திலிருந்தே சொந்தக் குரலில்தான் பேசி வருகிறார் ஆசின். இதில் எந்த வகையிலும் அவர் சமரசம் செய்து கொள்வதில்லை. தான் நடிக்கும் படங்களில் தானேதான் டப்பிங் பேசுவது என்பதில் உறுதியாக உள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் சொந்தக் குரலில் பேசி வரும் ஆசின் இப்போது இந்தியிலும் சொந்தக் குரலில் பேசி நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது கமல்ஹாசனுடன் ஆசின் இணைந்துள்ள தசாவதாரம் படத்தின் டப்பிங் வேலைகள் நடந்து வருகின்றன. இப்படத்தில் தஞ்சாவூர் அய்யராத்துப் பெண் கேரக்டரில் நடிக்கிறார் ஆசின்.

படத்தில் ஆசினின் இந்த கேரக்டரும் ரொம்ப முக்கியமானது என்பதால், இந்தக் கேரக்டருக்கான டப்பிங் பேச 3 நாட்களை ஒதுக்கியிருந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஒரே நாளில் வசனங்களைப் பேசி ஊதித் தள்ளி விட்டாராம் ஆசின்.

தஞ்சைப் பகுதி அய்யராத்துப் பெண்களின் உச்சரிப்புடன் மிக அழகாக பேசியுள்ளாராம் ஆசின். இந்த டப்பிங்குடன் ஆசினின் வேலை முடிந்து விட்டது. ஆசின் டப்பிங் பேசிய அழகையும், வேகத்தையும் பார்த்து கமல்ஹாசனும், கே.எஸ்.ரவிக்குமாரும் பாராட்டித் தள்ளி விட்டார்களாம்.

வழக்கமாக ஒரு ஹீரோயின் டப்பிங் பேசுவதாக இருந்தால் குறைந்தது 5 நாட்கள் முதல் ஒரு வாரம் வரை டைம் எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால் ஒரே நாளில் டப்பிஙகை முடித்த ஆசினின் வேகத்தைப் பார்த்து திரையுலகினர் அதிசயித்துள்ளனராம்.

இது லேசுப்பட்ட காரியம் அல்ல, சாதனை என்றும் பாராட்டியுள்ளனர். ஆசினின் டெடிகேஷனையும், அவரது வேகமான டப்பிங்கையும் பார்த்து கமல், ரவிக்குமார் ஆகிய இருவரும் அசந்து போய் விட்டனராம்.

ஆசின் டப்பிங் பேசியதை நாள் முழுவதும் அங்கேயே இருந்து பார்த்தாராம் கமல். ஆசின் ஒரு முழுமையான நடிகை. இந்தப் படத்திற்கு அவரும் ஒரு பெரும் பலம் என இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

Read more about: asin
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil