»   »  என் கல்யாணம் இப்போ இல்ல... அறிவிப்பு வரும் வரை சும்மா இருங்க!- அசின்

என் கல்யாணம் இப்போ இல்ல... அறிவிப்பு வரும் வரை சும்மா இருங்க!- அசின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: என் திருமணத் தேதி இன்னும் முடிவாகவில்லை. நானே அறிவிக்கும் வரை மீடியா அமைதி காக்க வேண்டும், என்று அசின் தெரிவித்துள்ளார்.

மைக்ரோமேக்ஸ் செல்போன் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவும் (36) நடிகை அசினும் (29) கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இதனையடுத்து விரைவில் திருமணம் செய்யப் போகிறார்கள். அதுகுறித்து பல்வேறு செய்திகள் மீடியாவில் வலம் வருகின்றன.

Asin's explanation on her marriage

இந்நிலையில் இருவரும் நவம்பர் 26 அன்று டெல்லியில் திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனை அசின் மறுத்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், "என் திருமணத் தேதி பற்றி வருகிற செய்திகள் எல்லாம் வேடிக்கையாக உள்ளன. இந்த வருட இறுதி வரை என்னுடைய படங்களை முடிக்கவேண்டியுள்ளது. அதற்குப் பிறகுதான் திருமணம். எனவே என்னிடமிருந்து அறிவிப்பு வரும்வரை அமைதியாக இருக்கவும்," என்று கூறியுள்ளார்.

English summary
Actress Asin has denied media reports on her marriage with industrialist Rahul Sharma.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil