»   »  டிசம்பரில் அசினுக்கு “டும் டும் டும்” - திருமண ஷாப்பிங்கில் மும்முரம்!

டிசம்பரில் அசினுக்கு “டும் டும் டும்” - திருமண ஷாப்பிங்கில் மும்முரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: டிசம்பர் மாதம் திருமணம் நடப்பதைத் தொடர்ந்து நடிகை அசின் நகைகள், உடைகளை தேர்வு செய்ய லண்டன் சென்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த அசின் பாலிவுட் அறிமுகத்திற்குப் பிறகு கோலிவுட்டை மறந்து பாலிவுட் படங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.

இருப்பினும் அவர் நடிப்பில் வெளியான இந்திப் படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாததால் அங்கும் அவருக்கு வாய்ப்பு குறையத் தொடங்கியது.

ராகுலுடன் காதல்:

ராகுலுடன் காதல்:

இதற்கிடையில் அசின் தொழிலதிபர் ஒருவரைக் காதலிப்பதாக தகவல் வெளியானது. முதலில் இதுவெறும் வதந்தி என்று கூறப்பட்டாலும், கடந்த மாதம் அசினின் காதல் உறுதிப்படுத்தப்பட்டது.

மைக்ரோமேக்ஸ் அதிபர்:

மைக்ரோமேக்ஸ் அதிபர்:

பின்னர், மைக்ரோமேக்ஸ் மொபைல் நிறுவன அதிபர் ராகுல் சர்மாவை அவர் காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதும் வெளிவந்தது.

தீவிரமான திருமண ஏற்பாடுகள்:

தீவிரமான திருமண ஏற்பாடுகள்:

திருமணம் முடிவானதை தொடர்ந்து சினிமாவில் நடிப்பதை தற்காலிகமாக அசின் நிறுத்தி வைத்துள்ளார். அசின் திருமண ஏற்பாடுகள் இப்போது தீவிரமாக நடக்கிறது. திருமண தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

டிசம்பரில் நடக்கலாம்:

டிசம்பரில் நடக்கலாம்:

இதற்கிடையில், அசினின் திருமணம் டிசம்பர் மாதம் நடக்கலாம் என்று அவருடைய நெருங்கிய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண ஏற்பாடுகள் தீர்மானம்:

திருமண ஏற்பாடுகள் தீர்மானம்:

இந்நிலையில் அசின் திருமணத்துக்கான நகைகள் மற்றும் உடைகளை தேர்வு செய்ய தயாராகி விட்டார். இதற்காக அவர் லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கு திருமணத்திற்கு தேவையானவற்றை வாங்கிவிட்டு பிரான்ஸ், மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்கிறார். அங்கேயும் திருமணத்துக்கு தேவையான பொருட்களை வாங்கிய பின் நாடு திரும்புகிறார்.

English summary
Having recently revealed that she is set to tie the knot, actress Asin is already preparing for her big day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil