»   »  ஆல்ப்ஸில் ஆசின்

ஆல்ப்ஸில் ஆசின்

Posted By:
Subscribe to Oneindia Tamil


வேல் படத்திற்காக ஆசினும், சூர்யாவும் ஆல்ப்ஸ் பனி மலையில் ஆடிப் பாடி அசத்தப் போகிறார்கள்.

Click here for more images

ஹரி இயக்கத்தில், சூர்யா, ஆசினின் அசத்தல் நடிப்பில் உருவாகி வரும் படம் வேல். தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ள இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளைப் படமாக்கி விட்டனர். இன்னும் சில காட்சிகள் மட்டுமே பாக்கி.

இந்த நிலையில் ஆசினும், சூர்யாவும், சுவிட்சர்லாந்துக்குப் பறந்துள்ளனர். அங்கு வேல் படப் பாடலுக்கு இருவரும் ஜோடி போட்டு பனி மலையில் ஆடிப் பாடிக் கலக்கவுள்ளனர்.

ஆசினுக்கு சுவிட்சர்லாந்து ரொம்பவும் விசேஷமானது. கஜினி உள்ளிட்ட ஆசின் நடித்துள்ள பல ஹிட் படங்களின் சில பாடல்கள் இங்குதான் படமாக்கப்பட்டுள்ளன என்பதுதான் அந்த விசேஷம். ஆல்ப்ஸ் மலைக்கும், ஆசினுக்கும் ரொம்பவே பொருத்தமாம்.

தற்போது வேல் படத்திற்காக ஆல்ப்ஸ் போயிருப்பதால் இந்தப் படமும் சூப்பர் ஹிட் என சந்தோஷிக்கிறார் ஆசின்.

படத்தின் பெரும்பாலான வசனக் காட்சிகளை நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் படமாக்கியுள்ளார் ஹரி.

இந்த நிலையில், சென்னையில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஆசின். தனது ஷூட்டிங் அனுபவம் குறித்து விலாவாரியாக விளக்கினார்.

ஆசின் கூறுகையில், படப்பிடிப்புக்காக நமது நாட்டின் பல்வேறு பதகுதிகளுக்கும் தொடர்ச்சியாக போய்க் கொண்டிருக்கிறேன். நமீபியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும் கூட போயுள்ளேன்.

ஆனால் குற்றாலம் மற்றும் மூணாரில் நடந்த ஷூட்டிங்குக்குப் போய் வந்த பிறகு ரொம்பவும் புத்துணர்ச்சியோடு உள்ளேன். மூனாருக்கு ஷூட்டிங் போனபோது, அங்கு நல்ல மழை. இதனால் ஷூட்டிங்கை கேன்சல் செய்ய நேரிட்டது.

இதனால் 2 நாள் பிரேக் கிடைத்தது. மூனாரை சுற்றிப் பார்த்து பொழுதைக் கழித்தேன். அழகான ஏரி, குளிர்ச்சியான சூழ்நிலை ஆகியவை என்னை ரொம்பவே கவர்ந்து விட்டது.

கண்ணைப் பறிக்கும் இயற்கை எழில் சூழ்ந்த லொகேஷன்கள் மற்றும் மலைப் பகுதியின் அழகிய லுக் ஆகியவை கவிதை எழுதத் தூண்டின. தனிமையில் இந்த இடங்களில் சுற்றித் திரிந்து மகிழ்ந்தேன்.

வேல், இந்தி கஜினிக்குப் பிறகு மறுபடியும் இங்கு ஒரு விசிட் அடித்து மகிழ திட்டமிட்டுள்ளேன்.

அதேபோல குற்றாலத்தில் இருந்தபோது பாவாடை, தாவணியில்தான் பாதி நாட்கள் இருந்தேன். கிராமத்து மக்களோடு இரண்டறக் கலந்து சந்தோஷித்தேன். பாவாடை, தாவணியில் இருந்த என்னை பலராலும் அடையாளம் காண முடியவில்லை.

குற்றலாலம் அருவி என்னை பரவசப்படுத்தியது. மேலும் அந்தப் பகுதியில் ரொம்பவும் பிரபலமான பரோட்டா, சிக்கன் சால்னாவும் என்னைக் கவர்ந்து விட்டது என்று குதூகலித்தார் ஆசின்.

இன்னும் இந்த இடங்களில் கிடைத்த குளிர்ச்சியான நினைவுகளிலிருந்து விலகாமலேயே ஆல்ப்ஸுக்குப் பறந்துள்ளார் ஆசின். திரும்பி வந்து என்னை கதை சொல்லப் போகிறாரோ?

Read more about: asin hari surya vel

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil