»   »  சூர்யாவை துரத்தும் அசின் !

சூர்யாவை துரத்தும் அசின் !

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூர்யாவும், அசினும் ஜோடி சேருவதைத் தற்போதைக்கு யாராலும் தடுக்க முடியாது போலிருக்கிறது. நின்று போன படத்தில் ஜோடிசேர்ந்த அவர்கள் இப்போது வேறோரு படம் மூலம் மீண்டும் இணைகிறார்கள்.

அஜீத் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட மிரட்டல் படத்தில் அஜீத்துக்குப் பதிலாக சூர்யா நடிக்கிறார். அதில், அஜீத்துக்குப்பேசப்பட்ட ஆசின் தான் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார்.

சூர்யாவும் ஆசினும் நடிக்க, கெளதம் இயக்கத்தில் சென்னையில் ஒரு மழைக்காலம் சூட்டிங் தொடங்கியது. ஆனால், திடீரெனதனது கதையின் மீது கெளதமுக்கே சந்தேகம் வந்துவிட, படத்தின் ஸ்கிரிப்டை சரி செய்துட்டு திரும்ப வரலாம் என்று கூறிசூட்டிங்கை நிறுத்தினார்.

கதையை சீரமைத்துப் பார்த்தும் கெளதம் திருப்தியடையவில்லை. சூர்யாவையும் ஆசினையும் அம்போவென விட்டுவிட்டு,காக்க.. காக்கவை தெலுங்கில் இயக்கப் போய்விட்டார்.

பல மாதங்கள் பொறுமையோடு காத்திருந்த சூர்யா, ஒரு நாள் கெளதமை செல்போனில் கூப்பிட்டு கடித்ததோடு, படத்தில்இருந்தும் விலகிக் கொண்டார்.

கிட்டத்தட்ட இதே நிலை தான் மிரட்டல் படத்துக்கும் ஏற்பட்டது. அஜீத்-ஆசின் ஜோடியாக நடிக்க இந்தப் படத்துக்கு பூஜைபோடப்பட்டது. ஆனால், அஜீத் திடீரென விலகிக் கொள்ள, ஆசின் மட்டும் தனியே நின்றார்.

சூர்யா மற்றும் அஜீத்துடன் ஜோடி சேர கிடைத்த வாய்ப்புக்கள் கண் முன்னாலேயே கை நழுவிப் போனதால் ஏமாந்து போனார்அசின்.

ஜீவாவின் இயக்கத்தில் ஆசின் ஒப்பந்தமான முதல் தமிழ்ப் படமான உள்ளம் கேட்குமேயில் இருந்து, அவர் நடித்த பலபடங்களும் தயாரிப்பு நிலையிலேயே சிக்கல்களை சந்தித்து நிறுத்தப்பட்டுவிட்டன. அந்த லிஸ்டில் சூர்யா, அஜீத்தின் படங்களும்சேர்ந்து கொண்டதால், சென்டிமெண்ட் பார்க்கும் கோடம்பாக்கம் ஆசினை ஒரு மாதிரியாக பார்க்க ஆரம்பித்தது.

இந் நிலையில் தான் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்த எம்.குமரன், சன் ஆப் மகாலட்சுமி பெரும் வெற்றியடைந்துவிட, ஆசின்குறித்த சென்டிமெண்டிகளும் தவிடுபொடியாகிவிட்டன. இதனால் மீண்டும் அவரைத் தேடி தயாரிப்பாளர்கள் வர ஆரம்பிக்கமகிழ்ச்சியில் இருக்கிறார் ஆசின்.

அஜீத் விலகியதால் நிறுத்தப்பட்ட மிரட்டல் படத்தை மீண்டும் எடுக்க முடிவு செய்த தயாரிப்பாளர் சூர்யாவிடம் பேச அவர் நடிக்கஒப்புக் கொண்டுவிட்டாராம். இந்தப் படத்தில் அஜீத்துக்குப் பேசப்பட்ட ஆசினே தனக்கு ஜோடியாக நடிப்பதில் எனக்கொன்றும்பிரச்சனையில்லை என்றும் கூறிவிட்டாராம்.

சென்னையில் ஒரு மழைக்காலத்தில் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்தும், சேர முடியாமல் போன வருத்தத்தில் இருந்த ஆசின் இந்தப்படத்தின் மூலம் மீண்டும் சூர்யாவுடன் ஜோடி சேர்வதால், முகம் முழுவதும் லைட் எரிய காணப்படுகிறார் ஆசின்.

அஜீத்துக்கு புக் செய்யப்பட்ட தன்னையே, ஜோடியாகத் தொடரலாம் என்று தயாரிப்பாளரிடம் சொன்ன சூர்யாவை உடனேசெல்லில் பிடித்து நன்றி சொன்னாராம் ஆசின்.

ஜோதிகா ஜாக்கிரதை !

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil