»   »  விஜய் ஜோடி ஆயிஷா டாக்கியா!

விஜய் ஜோடி ஆயிஷா டாக்கியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ஆயிஷா டாக்கியா நடிக்கவுள்ளார்.

டான்ஸ் ஆடி வந்த பிரபு தேவா பின்னர் நடிக்கவும் ஆரம்பித்தார். அதையும் முடித்து விட்டு (அல்லது முடித்து வைக்கப்பட்டு!), இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார்.

தெலுங்கில் இரண்டு படங்களை இயக்கி இரண்டையும் ஹிட்டாக்கிய கையோடு தமிழுக்கு வந்தார். விஜய்யை வைத்து போக்கிரி படத்தை இயக்கினார். இப்படம் பெரும் ஹிட் படமானது.

இதைத் தொடர்ந்து மீண்டும் தெலுங்குக்குத் திரும்பிய பிரபு தேவா, சிரஞ்சீவியை வைத்து சங்கர்தாதா ஜிந்தாபாத் படத்தை இயக்கி அதையும் வெற்றிப் படமாக்கினார்.

இந்த நிலையில் சல்மான் கான் இந்தியில் அழைக்கவே அங்கு போக்கிரியை ரீமேக் செய்ய போனார். ஆனால் எதிர்பாராதவிதமாக சல்மான் கானைத் தூக்கி சிறையில் போட்டு விட்டதால் போக்கிரி பாதியில் நிற்கிறது.

இதையடுத்து மீண்டும் பிரபு தேவாவுடன் இணைந்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் பிரபு தேவா. தற்போது விஜய் நடிக்கவுள்ள தரணியின் குருவி படத்தை முடித்து விட்டு பிரபு தேவா படத்துக்கு வருகிறார் விஜய்.

இப்படத்தை அடுத்த ஆண்டு திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் ஹாட் உட் ஆயிஷா டாக்கியா நடிக்கவுள்ளார். ஏற்கனவே இவர் இந்தி போக்கிரியில் சல்மானின் ஜோடியாக போடப்பட்டவர். லண்டன் கருணாஸ் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் புதிய படத்தின் ஒரு வரிக் கதையை ஏற்கனவே விஜய்யுடன் விவாதித்து விட்டார் பிரபு தேவா. விஜய்யும் கதைக்கு ஓ.கே. சொல்லி விட்டார். பிரபு தேவா மற்றும் விஜய் ஸ்டைலில் இப்படம் இருக்கும். போக்கிரியை விட படு தூக்கலாக படம் இருக்குமாம்.

இதற்கிடையே விஜய் நடிக்கவுள்ள குருவி படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் 2வது வாரத்தில் தொடங்குகிறது. அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதிதான் இப்படத்தைத் தயாரிக்கிறார் என்பது தெரியும்தானே.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil