»   »  ஆயிஷா, ஆயிஷா ....

ஆயிஷா, ஆயிஷா ....

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரபு தேவாவின் ஆயிஷா மோகம் தலைக்கேறி, அவரை இந்தி போக்கிரியின் நாயகியாக்கி விட்டது.

ஆயிஷா டாக்கியா. இந்தித் திரையுலகில் கிளாமர் அலையைப் பரப்பி வரும் இளம் நாயகி. இவரை சிவாஜியில் ரஜினிக்கு ஜோடியாகப் போடக் கூட பரிசீலித்தார்கள். ஆனாலும் கடைசி நேரத்தில் சில பல காரணங்களால் ஆயிஷாவுக்கு டாட்டா காட்டி விட்டனர். ஷ்ரியா வந்து சேர்ந்தார்.

ஆனால் ஆயிஷா மீது தமிழ் சினிமாக்காரர் ஒருவர் மட்டும் படா பாசமாக இருந்தார். அவர் வேறு யாருமல்ல, பிரபு தேவாதான். நல்ல ஆட்டாக்கார நடிகைகள் என்றால் பிரபு தேவாவுக்கு ரொம்பப் பிடிக்கும்.

அந்த வகையில் ஆட்டத்தில் அசத்தும் ஆயிஷாவை எப்படியாவது தனது படத்தில் பிடித்துப் போட்டு விட வேண்டும் என்று மோகம் கொண்டிருந்தார்.

போக்கிரி படம் தமிழில் உருவானபோது முதலில் இலியானாவைக் கேட்டார். தெலுங்கு போக்கிரியில் இலியானாதான் ஹீரோயின். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து ஆயிஷாவை முயற்சித்தார் பிரபு தேவா. ஆனால் அவரது கால்ஷீட் கிடைக்கவில்லை.

இந்த நிலையில்தான் சல்மான் கானை வைத்து இந்தியில் போக்கிரியை இயக்கும் வாய்ப்பு பிரபு தேவாவைத் தேடி வந்தது. ஆஹாஹா, வந்தச்சுடா வசமான வாய்ப்பு என்று புளகாங்கிதமடைந்த பிரபு தேவா, அப்படத்தில் சல்மானின் நாயகியாக ஆயிஷாவைப் போட்டு விட்டார் (முதலில் ஆசின்தான் இதில் நடிப்பதாக இருந்தது தெரியும்தானே!)

தனது மனம் கவர்ந்த ஹீரோயினே கிடைத்து விட்டதால் உற்சாகமாகியுள்ள பிரபு தேவா, ஆயிஷாவை கூட்டிக் கொண்டு பாங்காக் பறந்துள்ளாராம். பயப்படாதீர்கள், ஒரு பாடல் காட்சிக்காகத்தான். அங்கு ஆட்டத்தையும், பாட்டத்தையும் முடித்து விட்டு மும்பை ரிட்டர்ன் ஆகிறார்கள்.

சொல்லிக் கொடுப்பதை விட படு சிறப்பாக ஆடி பிரபு தேவாவுக்கு திருப்தி கொடுக்கிறாராம் ஆயிஷா.

டாக்கியா, போட்டுத் தாக்குயா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil