»   »  மந்திரவாதி பிடியில் கவர்ச்சி நடிகை பாபிலோனா! - பாட்டி பரபர புகார்

மந்திரவாதி பிடியில் கவர்ச்சி நடிகை பாபிலோனா! - பாட்டி பரபர புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மந்திரவாதி ஒருவரின் பிடியில் கவர்ச்சி நடிகை பாபிலோனா சிக்கியிருப்பதாக அவரது பாட்டி போலீசில் புகார் செய்துள்ளார்.

பிரபல கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் 80 வயது பாட்டி கிருஷ்ணகுமாரி. சென்னை சாலிக்கிராமத்தில் வசிக்கிறார். இவர் செவ்வாய்க்கிழமை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பரபரப்பு புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.

Babilona's grand mother lodges complaint

அந்த மனுவில், "பாபிலோனாவை நான் தான் வளர்த்தேன். அவரை திரைஉலகத்தில் அறிமுகப்படுத்தி பிரபல நடிகையாக வளர்த்துவிட்டதும் நான்தான்.

எனது பேத்தி பாபிலோனா தற்போது மந்திரவாதி சுந்தர் பாபுல்ராஜ் பிடியில் சிக்கியுள்ளார். வசியக்கலை மூலம் எனது பேத்தியை வசியப்படுத்தி, அந்த மந்திரவாதி தனது பிடியில் வைத்துள்ளார். எனது பேத்தியின் நகைகள் மற்றும் பணம் அனைத்தையும் அவர் அபகரித்துவிட்டார்.

அந்த மந்திரவாதி திருமணமானவர். அவரால் எனது பேத்தியின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இதுப்பற்றி நான் நேரிடையாக சென்று மந்திரவாதியிடம் பேசினேன். எனது பேத்தியை விட்டுவிடுமாறு கெஞ்சினேன். ஆனால் அந்த மந்திரவாதி எனக்கு கொலை மிரட்டல் விடுத்து தவறாகப் பேசினார்.

பாபிலோனாவை சிறைவைத்துள்ள மந்திரவாதி பல்வேறு குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்று தெரிகிறது. எனவே பாபிலோனாவை குறிப்பிட்ட மந்திரவாதியிடம் இருந்து பத்திரமாக மீட்கவேண்டும். மந்திரவாதி மீது சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்க வேண்டும்," என்று கோரியுள்ளார்.

English summary
Krishnakumari, a 80 years old grandmother of glamourous actress Babilona has lodged police complaint to save her.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil