»   »  பாபிலோனாவின் 'புது' அவதாரம்!

பாபிலோனாவின் 'புது' அவதாரம்!

Subscribe to Oneindia Tamil
Click here for more images
கவர்ச்சிக் கலக்கல் பாபிலோனாவை சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் புத்தம் புதுக் கோலத்தில் பார்த்த பயணிகள் சற்றே ஆச்சரியப் பார்வை பார்த்தனர். திருடர்கள் உஷார் என்ற பிரசாரத்துடன் பாபிலோனா அங்கு விசிட் அடித்ததுதான் காரணம்.

கவர்ச்சிப் பதுமையான பாபிலோனா பல்வேறு காரணங்களால் அவ்வப்போது திரையுலகிலும், பொது இடத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருபவர்.

சித்தியும் முன்னாள் உலுக்கல் நாயகியுமான மாயா மற்றும் மாயாவின் மகன் ஆகியோர் சமீப காலங்களில் சென்னையில் ஏற்படுத்திய பரபரப்பு ஜோதியில் பாபிலோனாவும் ஐக்கியமாகி சலசலப்பை ஏற்படுத்தினார்.

அதற்கு முன்பாகவே பாபியால் திரையுலகில் பலமுறை சலசலப்புகள் ஏற்பட்டதுண்டு. முன்னணி ஹீரோக்கள் சிலருடன் சில்மிஷமாகப் பழகி அதை சொல்லி அவர்களை மிரட்டி பணம் பறித்ததாக பாபி மீது திரையுலகில் முன்பு புகார் கூறப்பட்டது.

தற்போது கைவசம் படம் இல்லாமல் இருக்கும் பாபிலோனா, 2 நாட்களுக்கு முன்பு சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் புடவையில் பளபளவென கையில் பிட் நோட்டீஸ்களுடன் உலா வந்தார்.

ரயிலில் செயல்படும் மயக்க பிஸ்கட் கொள்ளையர்களிடமிருந்து தப்புவது எப்படி, நகை, பணம் திருடு போகாமல் பாதுகாப்பாக பயணிப்பது எப்படி என்பது குறித்து ரயில்வே போலீஸார் நடத்திய விழிப்புணர்வுப் பிரசாரத்தில் பாபியும் ஒரு அங்கமாக கலந்து கொண்டார்.

இதில் பாபி தவிர வேறு சில டிவி நடிகைகளும் கலந்து கொண்டனர். கவர்ச்சிகரமான நடிகைகள் மூலம் பிரசாரம் செய்தால் பொதுமக்களுக்கு உணர்ச்சி அதாவது விழிப்புணர்ச்சி ஏற்படும் என்பதால் ரயில்வே காவல்துறை இந்த வித்தியாசமான ஐடியாவை செயல்படுத்தியது.

ரயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடம் பாபி அண்ட் கோவினர் பிட் நோட்டீஸ்ளைக் கொடுத்து, பத்திரமாக பயணியுங்கோ என்று அட்வைஸ் செய்தனர். மேலும், ரயில்களிலும் ஏறி அங்கிருந்த பயணிகளிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினர்.

விழிப்புணர்ச்சியைத் தூண்டும் பிரசாரத்தில் கலந்து கொண்ட பாபியைப் பார்த்து ஆண் பயணிகள் பலர் 'வேறு விதமாக' உணர்ச்சிவசப்பட்டதையும் காண முடிந்தது.

Read more about: babilona
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil