»   »  மறுபடியும் முதல் காதலிடமே திரும்பிச் சென்ற த்ரிஷா

மறுபடியும் முதல் காதலிடமே திரும்பிச் சென்ற த்ரிஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை த்ரிஷா மீண்டும் முதல் காதலிடமே திரும்பிச் சென்றுவிட்டாராம்.

என்னது, நடிகை த்ரிஷா மறுபடியும் தனது முதல் காதலிடமே திரும்பிச் சென்றுவிட்டாரா? என்று வியக்கிறீர்களா. நீங்கள் நினைப்பது போன்று இது அந்த காதல் இல்லை வேறு காதல். அந்த காதல் வேறு எதுவும் இல்லை நீச்சல் தான்.

அடச்சே நீச்சல் தான் அந்த காதலாக்கும் என்று நீங்கள் ஃபீல் பண்ணுவது தெரிகிறது.

ஜிம்

ஜிம்

த்ரிஷா டயட்டில் இருப்பது, ஜிம்முக்கு செல்வதோடு நிறுத்திக் கொள்வது இல்லை. அவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைக்க நீச்சலும் அடிக்கிறார்.

நீச்சல்

நீச்சல் குறித்து த்ரிஷா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, மீண்டும் எனது முதல் காதலிடம் திரும்பிவிட்டேன் #sunsetswim #waterbaby #favexcersise #50laps முகுந்தன் சார் பயிற்சி அளித்தார் என்று தெரிவித்து புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

பிரியாணி

பிரியாணி

த்ரிஷா என்ன தான் டயட்டில் இருந்தாலும் அவருக்கு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் அம்மா செய்த பிரியாணி என்றால் உயிர். அதனால் பிரியாணி கிடைக்கும் போது எல்லாம் மூக்கு முட்ட சாப்பிட்டுவிட்டு ஜிம்மில் கூடுதலாக ஒர்க் அவுட் செய்வார்.

அப்படியே

அப்படியே

நடிகைகள் நடிக்க வந்த புதிதில் இருப்பது போன்றே 10 ஆண்டுகளுக்கு மேல் இருப்பது இல்லை. ஆனால் த்ரிஷா நடிக்க வந்தபோது எப்படி இருந்தாரோ இன்றும் அப்படியே அழகாக, சிக்கென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Trisha tweeted that, 'Back 2 my 1st love #sunsetswim #waterbaby #favexcersise #50laps #wastrainedbythebest #mukundansir… https://instagram.com/p/80mQQByLxA/'
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos