எனக்கு ஒழுக்கத்தை கத்துக்கொடுத்தது தமிழ் சினிமா தான்.. பேட் கேர்ள் பட நடிகை பேட்டி!

சென்னை: பானு பிரியாவின் சகோதரியான சாந்தி பிரியா, 'செண்பகமே செண்பகமே' பாடல் இடம் பெற்ற 'எங்க ஊரு பாட்டுக்காரன்' படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.அதுமட்டுமில்லாமல், புரானா இதிகாச கதையான விஸ்வாமித்ரா படத்தில் சாகுந்தலாவாக நடித்திருந்தார். சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே சினிமாவில் பிஸியாக இருந்த சாந்தி பிரியா, திருமணம் செய்து கொண்டு பின் சினிமாவைவிட்டு விலகினார். தற்போது, இவர் 'பேட் கேர்ள்' என்ற படத்தில் ரீ என்ட்ரி கொடுத்து இருக்கிறார்.

அண்மையில் இவர் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள இவர் பல விஷயம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அதில், ஒவ்வொரு மொழியிலும் எனக்கு நல்ல அனுபவம் இருந்தது. ஆனால், நான் தமிழை தேர்வு செய்து நடித்தேன். ஏனென்றால் தமிழ் படங்கள் தான் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தது. தமிழ் சினிமாவில் அக்கா டாப் நடிகையாக இருந்த போதும், புதிதாக வந்த எனக்கு அனைத்தையும் கற்றுக்கொடுத்தது தமிழ் சினிமா தான். எனக்கு ஒழுக்கத்தையும், சரியாக நேரத்தை கடைப்பிடிப்பது, பணிவாக இருப்பது ஆகியவற்றை கற்றுக்கொடுத்ததும் இந்த தமிழ் சினிமா தான். இதற்காக நான் தமிழ் சினிமாவிற்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

shanthi priya interview
Photo Credit:

சாந்தி பிரியா: தொடர்ந்து தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய சாந்தி பிரியா, நான் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டேன். என் அம்மாவிற்கு விருப்பம் இல்லை இருந்தாலும் என் காதலை என் அம்மா ஏற்றுக்கொண்டார்கள். படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு இருப்பதால், இந்த நேரத்தில் திருமணம் தேவையா? என்று தான் கேட்டார்கள். ஆனால், அந்த நேரத்தில் காதல் என் கண்ணை மறைத்து விட்டது, நான் திருமணம் செய்து கொண்டேன்.

காதல் திருமணம்: அம்மாவும் திருமணம் செய்து கொண்டால் குடும்பத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சொல்வார். அது தான் எனக்கும் சரி என்று பட்டது. இதனால், திருமணத்திற்கு பிறகு குடும்பம் தான் முக்கியம் என்று சினிமாவில் இருந்து முழுமையாக விலகி விட்டேன். 2004ம் ஆண்டு என் கணவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார். அவர் மறைந்து 20 வருடத்திற்கு மேல் ஆகிறது. ஆனால், இப்பொழுதும் நான் அவருடைய நினைவில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால், இதில் இருந்து மீண்டு வரவேண்டும் என்று தான் தற்போது 'பேட் கேர்ள்' படத்தில் நடித்து இருக்கிறேன் என்று அந்த பேட்டியில் பேசி இருந்தார்.

More from Filmibeat

Read more about: interview பேட்டி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X