»   »  ஸ்ரேயாவைக் கட்டாயப்படுத்தி மன்னிப்பு கடிதம் வாங்கிய படக்குழு!

ஸ்ரேயாவைக் கட்டாயப்படுத்தி மன்னிப்பு கடிதம் வாங்கிய படக்குழு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டாருக்கே ஜோடி போட்ட ஸ்ரேயாவின் நிலை இப்போது மோசம். பாபநாசம் ஹிந்தி ரீமேக்கில் அம்மா கேரக்டரில் நடித்தவர் இப்போது சிம்புவுக்கும் அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி வருகின்ற வாய்ப்புகளையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் ஸ்ரேயா தெலுங்கில் மூத்த நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக கவுதமி புத்ர சடர்கனி என்ற படத்தில் நடிக்கிறார். பாலகிருஷ்ணாவுக்கு ஸ்ரேயாவின் தாத்தா வயது.

Balakrishna movie crew forced Shriya to give apology letter

பரபரப்புக்காக எதையாவது பேசிக்கொண்டும் செய்துகொண்டும் இருக்கும் ஸ்ரேயா இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த ஸ்டில்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். இன்னும் படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக்கே வராத நிலையில் காட்சிகளின் ஸ்டில்கள் வந்ததால் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்ட எல்லோருக்குமே டென்ஷன்.

ஸ்ரேயாவைக் கண்டித்த படக்குழு 'இனி இப்படி செய்ய மாட்டேன்' என்று பள்ளி மாணவி கணக்காக மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியிருக்கிறது. இந்த கடிதம் எழுதி வாங்கும்போது பாலகிருஷ்ணாவும் உடன் இருந்திருக்கிறார்!

English summary
The crew of Balakrishna's new movie has compelled actress Shriya to give apology letter for releasing shooting pics online.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil