»   »  த்ரிஷா விரும்புவதையே கோரிக்கையாக விடுத்த 'லயன்' பாலகிருஷ்ணா

த்ரிஷா விரும்புவதையே கோரிக்கையாக விடுத்த 'லயன்' பாலகிருஷ்ணா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்குமாறு த்ரிஷாவுக்கு தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா கோரிக்கை விடுத்துள்ளார்.

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் லயன். படத்தில் த்ரிஷா, ராதிகா ஆப்தே என்று இரு நாயகிகள். இந்த படத்தில் நடிக்கையில் தான் தெலுங்கு திரையுலகம் ஆணாதிக்கம் மிக்கது என்றும், இனி தெலுங்கு படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் ராதிகா.

ராதிகாவின் பேச்சை கேட்ட தெலுங்கு திரை உலகினர் சிலர் அவருக்கு தடைவிதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலகிருஷ்ணா

பாலகிருஷ்ணா

த்ரிஷாவுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது. இந்த ஆண்டே திருமணம் என்று முன்பு கூறப்பட்டது. இது குறித்து அறிந்த பாலகிருஷ்ணா த்ரிஷாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் திருமணமான பிறகு தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று த்ரிஷாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளாராம்.

பூலோகம்

பூலோகம்

கல்யாணகிருஷ்ணன் ஜெயம் ரவி, த்ரிஷாவை வைத்து இயக்கியுள்ள பூலோகம் படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் த்ரிஷா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேய் படம்

பேய் படம்

த்ரிஷாவுக்கு பேய் படங்கள் என்றால் பிடிக்கும். ஆனால் இது வரை பேய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வரவில்லையே என்று ஏங்கினார். தற்போது அந்த ஏக்கமும் தீர்ந்துள்ளது. காரணம் அவர் பேய் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் மறுபடியும் கமல் ஹாஸனுடன் ஜோடி சேர உள்ளார்.

திருமணம்

திருமணம்

திருமணம் நிச்சயம் ஆனாலும் த்ரிஷாவின் மவுசு குறையவில்லை மாறாக அதிகரித்துள்ளது. அதனால் அவர் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவரின் திருமணம் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போடப்பட்டுள்ளதாம்.

நடிப்பு

நடிப்பு

திருமணம் ஆனாலும் நான் தொடர்ந்து நடிப்பேன். நடிப்பை விட்டுவிட்டு வீட்டில் அமர்ந்துவிட மாட்டேன் என த்ரிஷா தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து நடிப்பதை தான் பாலகிருஷ்ணாவும் விரும்புகிறார்.

English summary
Balakrishna has requested Trisha to continue acting even after marriage.
Please Wait while comments are loading...