»   »  நயன் தாராவுக்கு தெலுங்கில் நடிக்கத் தடை?

நயன் தாராவுக்கு தெலுங்கில் நடிக்கத் தடை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொதுவாகவே பட்த்தின் புரமோஷன்களுக்கு வரமாட்டார் நயன்தாரா. கிளாமர், நெருக்கம் காட்டவேண்டும் என்றால் அதனை கதை சொல்லும்போதே சொல்லிவிட வேண்டும். சில ஹீரோக்கள், இயக்குநர்கள் தங்கள் இஷ்டத்துக்கு காட்சிகளை மாற்றுவார்கள். அப்படி மாற்றினால் டென்ஷன் ஆகிவிடுவார் நயன். அதன்பிறகு நயனை ஷூட்டிங்குக்கே பிடிக்க முடியாது.

முன்பே ஒருமுறை தெலுங்கில் இதுபோல ஒரு பிரச்னை ஆகி, நயனுக்கு தெலுங்கு பட உலகம் நடிக்க தடை போட்டுவிட்டது. இதனால் தவித்துப்போன ஹீரோக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நயனுக்கு சிபாரிசு செய்ய ஆரம்பித்தனர்.

Ban on Nayanthara in Telugu again?

வெங்கடேஷ், நயன் தாரா நடிப்பில் இன்று வெளியாகியிருக்கிறது 'பாபு பங்காரம்'. தமிழில் நயன் தாராவுக்கு இருக்கும் மார்க்கெட் காரணமாக தமிழில் டப் செய்யப்பட்டு செல்வியாகவும் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இந்த படத்தில் ஒரு கிளாமர் பாடலுக்கு ஆடுகிறேன் என்று ஓகே சொல்லியிருந்த நயன் படப்பிடிப்பின்போது காதலர் பேச்சைக் கேட்டு முடியாது என மறுத்துவிட்டாராம். காஸ்ட்யூமை மாற்றாவிட்டால் பாடலில் நடிக்கவே மாட்டேன் என்று சிங்கப்பூர் கலை நிகழ்ச்சிக்கு போய் விட, அந்த பாடல் இல்லாமலேயே இன்று படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

இது அங்கிருக்கும் சங்கங்களுக்கு புகாராக போக, நயன் தாராவுக்கு மீண்டும் ரெட் கார்டு போடும் யோசனையில் இருக்கிறதாம் டோலிவுட்.

English summary
The Telugu cinema industry is considering to impose a ban on Nayanthara who was recently refused to attend Babu Bangaram promotions.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil