»   »  'டிஆர்பி'க்காக நடத்தப்படும் பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கணும்: நடிகை ரஞ்சனி

'டிஆர்பி'க்காக நடத்தப்படும் பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கணும்: நடிகை ரஞ்சனி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகைகள் நடத்தும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும் என நடிகை ரஞ்சனி தெரிவித்துள்ளார்.

தமிழில் நடிகைகள் குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன், தெலுங்கில் கீதா, மலையாளத்தில் ஊர்வசி உள்ளிட்டோர் தொலைக்காட்சி சேனல்களில் தம்பதிகளின் பிரச்சனையை தீர்த்து வைக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிகளை நடத்த நடிகைகளுக்கு தகுதி இல்லை என நடிகை ரஞ்சனி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சி குறித்து தான் ஃபேஸ்புக்கில் போட்ட போஸ்ட் இப்படி வைரலாகும் என தான் எதிர்பார்க்கவில்லை என்றும், பிறரின் கவனத்தை ஈர்க்க இப்படி செய்யவில்லை என்றும் ரஞ்சனி ஃபேஸ்புக்கில் தற்போது தெரிவித்துள்ளார்.

பஞ்சாயத்து நிகழ்ச்சிகள்

பஞ்சாயத்து நிகழ்ச்சிகள்

நாங்களும் கவுன்சிலிங் தருகிறோம் என்று நடத்தப்படும் நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட வேண்டும் என்பதே என் நோக்கம் நண்பர்களே. இந்த பஞ்சாயத்து நிகழ்ச்சிகள் பல விதிமுறைகளை மீறியுள்ளன என்கிறார் ரஞ்சனி.

என்.ஜி.ஓ.

என்.ஜி.ஓ.

இலவசமாக கவுன்சிலிங் அளிக்கும் அரசு அல்லது என்.ஜி.ஓ.க்களை அணுகுமாறு கேட்டுக் கொள்கிறேன். நீதிமன்றங்களுக்கு செல்லும் முன்பு மத்தியஸ்தரை அணுகவும் என்று ரஞ்சனி கூறியுள்ளார்.

நடிகைகள்

நடிகைகள்

என் சக சகோதரிகளுக்கு எதிராக எனக்கு எந்தவித தனிப்பட்ட விரோதமும் கிடையாது. அவர்களின் நிகழ்ச்சி மூலம் சமுதாயத்தில் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து அவர்களுக்கு தெரியவில்லை என்கிறார் ரஞ்சனி.

தடை

நாம் ஒன்று சேர்ந்து குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கக் கோருவோம். நிகழ்ச்சிக்கு வந்து உங்களால் மனம் புண்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேளுங்கள் என்று ரஞ்சனி தெரிவித்துள்ளார்.

டிவி சேனல்கள்

அனைத்து மொழி டிவி சேனல்களுக்கு ஒரு வேண்டுகோள். டிஆர்பிக்காக நடத்தப்படும் அந்த நிகழ்ச்சிகளை நிறுத்துவோம். அன்பு செலுத்துவோம், பிறருக்கு உதவுவோம் என்பதே எனது குறிக்கோள் என்று ரஞ்சனி கூறியுள்ளார்.

English summary
Actress Ranjini said that counselling programmes for couples should be banned. She has asked the people to unite to seek ban for these programmes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil