»   »  பணத்துக்காக நடிக்க முடியாது.. மனத் திருப்தி முக்கியம்!- 'பெங்களூர் நாட்கள்' பார்வதி

பணத்துக்காக நடிக்க முடியாது.. மனத் திருப்தி முக்கியம்!- 'பெங்களூர் நாட்கள்' பார்வதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பார்வதி மேனன்... ஸாரி, பார்வதியை நினைவிருக்கிறதா.. பூ படத்தில் காட்டுப் பூவாய் அறிமுகமாகி அசத்தல் நடிப்பைத் தந்தவர், எப்போதாவது மலரும் குறிஞ்சிப் பூ மாதிரி அரிதாகவே தமிழில் தலை காட்டுகிறார்.

மரியானில் தனுஷுடன் ஜோடி போட்டவர், உத்தம வில்லனில் கமலுக்கு மகளாய் அசத்தினார்.


Bangalore Naatkal Parvathy interview

இப்போது பெங்களூர் நாட்கள் படத்தின் நாயகிகளுள் ஒருவராக வருகிறார்.


இன்று சென்னையில் பார்வதியிடம் பேசும் வாய்ப்புக் கிடைத்தது.


ஏன் அடிக்கடி காணாமல் போகிறீர்கள், தமிழில்?


வந்த வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எனக்குத் திருப்தியாக வேடங்கள் அமைய வேண்டும். அதற்காக நான் காத்திருப்பேன்.


நீங்கள் நடிக்க வந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. உங்களுடன் அல்லது உங்களுக்குப் பின் அறிமுகமான நாயகிகள் வெகு தூரம் போய்விட்டார்களே...


அதையெல்லாம் நான் யோசிப்பதில்லை. பணம் ஒரு பொருட்டல்ல. பணத்துக்காக நான் நடிப்பதும் இல்லை. நான் ஏற்கும் வேடங்கள் என் மனதுக்கு நெருக்கமாக இருந்தால்தான் லயித்து நடிக்க முடியும். ஒரு ஐட்டம் பாட்டு என்றால் கூட - ஐட்டம் பாட்டை குறை சொல்லவில்லை...- எனக்கு அதில் ஒரு நியாயம் இருக்க வேண்டும். பிடித்திருந்தால் ஐட்டம் பாடலுக்கு கூட நடிப்பேன்.


பெங்களூர் டேஸில் ஏற்ற அதே வேடத்தை பெங்களூர் நாட்களிலும் செய்கிறீர்களே...


எனக்கு அந்த வேடம் பிடித்திருந்தது. மீண்டும் பண்ண போரடிக்கவில்லை. தமிழில் உடை, உடல்மொழி, ஹேர் ஸ்டைல் எல்லாமே வேறு.


படப்பிடிப்புத் தளத்தில் மிக எளிமையாக இருப்பதாக யூனிட்டில் உங்களைப் புகழ்கிறார்களே...


எளிமையாய் இருப்பதாய் நடிக்கவில்லை. அது என் இயல்பு. எனக்கு ஒரு உதவியாளர் போதும். நான்கைந்து பேரை வைத்துக் கொண்டால், அவர்களைக் கவனிக்கவே எனக்கு சரியாக இருக்கும். மேக்கப், டச்சப் என்று நேரத்தைக் கொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.

English summary
Bangalore Naatkal actress Parvathy Menon says that she never sign movies just for money.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil