»   »  நடிப்பு தொழில் என்பது தோலுக்கு 'டார்ச்சர்': டாப்ஸி

நடிப்பு தொழில் என்பது தோலுக்கு 'டார்ச்சர்': டாப்ஸி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகையாக இருப்பது தோலுக்கு பெரிய டார்ச்சர் என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.

ஆரம்பம் படத்தை அடுத்து டாப்ஸி நடித்த தமிழ் படங்கள் எதுவும் ரிலீஸாகவில்லை. அவர் நடித்துள்ள காஞ்சனா 2, வை ராஜா வை ஆகிய படங்கள் இந்த ஆண்டு ரிலீஸாகி உங்களை மகிழ்விக்க உள்ளன.

இந்நிலையில் டாப்ஸி எவர்யூத் சிகப்பழகு கிரீமின் பிராண்ட் அம்பாசிடராக ஆகியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

டார்ச்சர்

டார்ச்சர்

நடிப்பு தொழில் என்பது தோலுக்கு சரியான டார்ச்சர் ஆகும். என் தோலை பளபளப்பாக வைக்க நான் நிறைய தண்ணீர் குடித்து வருகிறேன். நான் முடிந்த வரை எண்ணெய் அதிகம் உள்ள உணவு வகைகளை தவிர்த்து வருகிறேன்.

பிராண்டுகள்

பிராண்டுகள்

நான் எந்த பிராண்டுக்கு விளம்பரம் செய்ய வேண்டும் என்பதில் நான் எப்பொழுதுமே மிகவும் கவனமாக உள்ளேன். சிகப்பழகு கிரீம் தொடர்பான பிராண்ட் அம்பாசிடராக நான் ஆகியுள்ளது இதுவே முதல் முறை.

சிகப்பழகு

சிகப்பழகு

நான் சிகப்பழகு பொருட்களை பயன்படுத்துவது இல்லை. நான் விளம்பரப்படுத்தும் கிரீம் உங்களுக்கு பளபளப்பை அளிக்கும். சிகப்பழகு என்பது அழகின் அர்த்தம் அன்று.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரங்களில் நடிப்பது நடிகர், நடிகைகளுக்கு முக்கியம். ஏனென்றால் எங்களின் பேட்டிகள், படங்களை விட விளம்பரங்கள் தான் டிவியில் அதிகம் ஒளிபரப்பாகிறது என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.

English summary
Actress Taapsee Pannu, who has signed up an endorsement deal with skincare brand Everyuth, says the acting profession is a "torture" on one's skin -- but with a mix of right food and liquid intake, she keeps herself glowing.
Please Wait while comments are loading...