For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சிறந்த பிறந்த நாள் பரிசு… சாய்பல்லவி புது பட அப்டேட்

  |

  சென்னை : நடிகை சாய் பல்லவி இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

  பிரேமம் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. முதல் படத்திலேயே ஒட்டுமொத்த இளைஞர்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டார்.

  இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

   கூகுள் குட்டப்பா ரோபோவை இவர் வீட்டுக்கு அனுப்புங்கள்... தர்ஷன் யாரை சொல்கிறார் ? கூகுள் குட்டப்பா ரோபோவை இவர் வீட்டுக்கு அனுப்புங்கள்... தர்ஷன் யாரை சொல்கிறார் ?

  நடிப்பின் நாயகி

  நடிப்பின் நாயகி

  பிரேமம் திரைப்படத்திற்குப் பிறகு சாய்பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் பிஸியான நடிகையாக இருந்து வருகிறார். தெலுங்கு திரையுலகில் உச்சத்தில் இருக்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் சாய் பல்லவி அங்கு பல முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அவர் நடித்த Fidaa எனும் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று அவர் புகழை ஆந்திரா முழுக்க கொண்டு சேர்த்தது. அவருக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது. தமிழில் சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார் சாய் பல்லவி. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடனப் போட்டியில் கலந்து கொண்டு, அங்கிருந்து மெல்ல சினிமாவிற்குள் நுழைந்து, தற்போது மூன்று மொழிகளிலும் முக்கியமான கதா நாயகியாக இருந்து வருகிறார். எந்தப் பின்புலமும் இல்லாமல் சினிமாவில் வந்து ஜெயிக்க நினைக்கும் பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.

  " கார்கி " ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் Glimpse

  சாய் பல்லவி நடிக்கும் கார்கி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நீதி தேவதையின் முன்பு நீதிக்காக காத்திருக்கும் ஒரு அபளை பெண்ணாக காட்சி அளிக்கிறார் சாய்பல்லவி. பஸ்ட் லுக் போஸ்டரே இந்த படத்தின் கதை எத்தனை ஆழமானதாக இருக்கும் என யோசிக்க வைக்கிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் Glimpse வீடியோவையும் வெளியிட்டனர் படக்குழு. அதில் படத்தின் காட்சிகளை படமாக்கும் விதம், டப்பிங் பேசும் காட்சிகளை இணைத்துள்ளனர். தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளிலும் சரளமாக சாய்பல்லவி பேசும் காட்சிகளை அதில் தொகுத்துள்ளனர். எந்த மொழியையும் மிக இயல்பாக பேசும் சாய்பல்லவி இதுவரை தான் நடித்த அனைத்து படங்களுக்கும் அவரே டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  காத்திருந்த சாய் பல்லவி

  காத்திருந்த சாய் பல்லவி

  நடிகை சாய் பல்லவி கடைசியாக நடித்த படம் சியாம் சிங்க ராய். ஒரு தேவதாசி கதாபாத்திரம் ஏற்று தனது சிறப்பான நடிப்பால் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் தந்து அனைத்து மக்களிடம் இருந்தும் பாராட்டுக்களைப் பெற்றார். தற்போது அவர் நடிக்கும் கார்கி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். ‘ இதை பகிர்ந்து கொள்ள பல மாதங்கள் காத்திருந்தேன். இறுதியாக இன்று எனது பிறந்த நாளில் இதை அறிவித்துள்ளது படக்குழு " என குறிப்பிட்டுள்ளார் . கோவிந்த் வசந்த் இந்த படத்திற்கு இசையமைக்க, Sreeyanti prema krishna akkatty ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டராக சாபிக் முஹம்மது அலி பணியாற்றுகிறார்.

  Recommended Video

  என் life-ல Miracle நடந்திருக்கு|Janani Iyer speech |Filmibeat Tamil
  பல மொழிகளில் உருவாகும் கார்கி திரைப்படம்

  பல மொழிகளில் உருவாகும் கார்கி திரைப்படம்

  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் வெளியாக இருக்கும் கார்கி திரைப்படத்தை எழுதி இயக்குபவர் கௌதம் ராமச்சந்திரன். இவர் இதற்கு முன்பு ரிச்சி திரைப்படத்தை இயக்கியவர். கார்கி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யா லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாய்பல்லவி மற்றும் Gargi படத்தை குறிப்பிட்டு ஒரு பதிவை போட்டுள்ளார்." பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாய் பல்லவி. கார்கி படத்தை நினைத்து பெருமை கொள்கிறேன். உன்னுடன் பரிச்சயமானது உன்னுடன் இணைந்து பணி புரிவதையும் கௌரவமாக நினைக்கிறேன் " என எழுதியுள்ளார். இன்று சாய்பல்லவி பிறந்தநாளை முன்னிட்டு பல சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

  English summary
  Best Birthday Gift, Sai Pallavi’s New Movie Update
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X