»   »  செகண்ட் ஹீரோயின் பானு!

செகண்ட் ஹீரோயின் பானு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஓவர் பந்தா காட்டியதால், பரணி பாப்பா பானுவைத் தேடி புதுப் பட வாய்ப்பு வராததால், 2வது நாயகியாக நடிக்கவும் ரெடி என்று ஓலை அனுப்பியுள்ளாராம்.

தாமிரபரணி மூலம் தமிழ் சினிமாவுக்கு தளதளவென அறிமுகமானவர் கேரளத்து பானு. அழகான முகம், அம்சமான உடல் வாகு என சிறப்பாக இருந்ததால் பானு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

தாமிரபரணியில் அவரது நடிப்பும், அழகும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களைக் கவர்ந்ததால் சிலர் அவரைத் தேடி கால்ஷீட் கேட்டு அணுகினர்.

ஆனால் பரீட்சை இருக்கிறது, படிக்கணும், அப்புறமா பார்க்கலாமா என்று அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டார் பானு. ஆனால் மறுபக்கம், சில மீடிேயட்டர்கள் மற்றும் பி.ஆர்.ஓ.க்கள் மூலம் அதிக சம்பளம் கேட்டு தூதம் விட ஆரம்பித்தார்.

இதனால் கடுப்பாகிப் போன தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் பானு பக்கம் திரும்பக் கூட மறுத்து மற்ற நடிகைகள் பக்கம் கவனத்தைத் திருப்பி விட்டனர்.

இதனால் கவலையாகிப் போனார் பானு. இப்போது பரீட்சையை எழுதி முடித்து விட்டாராம். இனிமேல் நடிக்க நான் ரெடி என்று கூறியுள்ளார்.

ஆனால் கூப்பிடத்தான் ஆள் இல்லையாம். இதனால் கவலையில் மூழ்கிய பானு, 2வது நாயகி வேடமாக இருந்தாலும் பரவாயில்லை சொல்லி விடுங்கள், கில்லி போல பாய்ந்து வருகிறேன் என்று கோலிவுட் மீடிேயட்டர்களிடம் மேட்டரைப் போட்டுள்ளாராம்.

ஆனால் அதற்கும் கூட இப்போதைக்கு வாய்ப்புகள் வருவது போலத் தெரியவில்லையாம். இதனால் தனது கட்டுடலை, கன கச்சிதமாக மாற்றிக் ெகாண்டு (பானுவுக்கு தொப்பை கொஞ்சம் ஜாஸ்தி) புத்தம் புதுப் பொலிவுடன் முழு வீச்சில் களம் இறங்க திட்டமிட்டுள்ளாராம் பானு.

அடடா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil